நள்ளிரவில் ஒரு பெண் நகை அணிகலன்களை அணிந்து கொண்டு எப்பொழுது சுதந்திரமாக நடமாடுகிறாளோ அப்போதுதான் இந்தியாவிற்கு சுதந்திரம் கிடைத்ததாக கருதவேண்டும்!-திருச்சி சரக டிஐஜி ஆனி விஜயா பேட்டி.

திருச்சி சரக மாவட்ட காவல்துறை, குழந்தைகள் கடத்தல் தடுப்பு பிரிவு மற்றும் தமிழி தொண்டு நிறுவனம், நவல்பட்டு கிராம குழு மற்றும் அன்னை தெரசா டிரஸ்ட் சார்பில் பெண்களுக்கும், குழந்தைகளுக்கும் கொரோனா காலத்தில் ஏற்படும் வன்முறைகளில் இருந்து பாதுகாத்துகொள்வதற்கான விழிப்புணர்வு நிகழ்ச்சி, திருவெறும்பூர் அருகே நவல்பட்டில்  உள்ள ஒரு தனியார் திருமண மண்டபத்தில் இன்று நடைப்பெற்றது. இவ்விழாவிற்கு திருவெறும்பூர் டிஎஸ்பி சுரேஷ்குமார் தலைமை வகித்தார்.

நவல்பட்டு கிராம தலைவர் செல்வராஜ், செயலாளர் பிரேம்குமார், பொருளாளர் பாரதிராஜா ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

இவ்விழாவில் திருச்சி சரக டிஐஜி ஆனி விஜயா சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு உரையாற்றினார்.

குழந்தைகள் தற்போது டிவி, இன்டர்நெட், கம்ப்யூட்டர், செல்போன் ஆகிவற்றில் மூழ்கிவிடுகின்றனர். அவர்கள் உடற்பயிற்சி சார்ந்த விளையாட்டுகளில் ஈடுபடுவது இல்லை என தெரிவித்ததோடு, இந்த விழாவில் கலந்து கொண்ட சிறுவர், சிறுமிகளை அழைத்து தாங்கள் என்னென்ன விளையாட்டுகளை விளையாடி வருகிறார்கள் என்றும்,  பாரம்பரிய விளையாட்டுகளான பாண்டி, சிப்பின் கயிறு, பல்லாங்குழி, கோகோ, கண்ணாமூச்சி குறித்த பல்வேறு விளையாட்டுகள் குறித்தும் கேட்டதோடு, அந்த குழந்தைகள் சாப்பிடும் உணவு வகைகள் பற்றியும் திருச்சி சரக டிஐஜி ஆனி விஜயா கேட்டறிந்தார்.

முன்பு பெண்கள் வீட்டில் இருந்தபடியே அம்மி அறைப்பது, மாவு ஆட்டுவது, தண்ணீர் இறைப்பது போன்ற வேலைகள்  மூலம் பல்வேறு உடற்பயிற்சிகளை செய்து வந்தனர். ஆனால், தற்பொழுது கிரைண்டர், மிக்சி, போன்று இயந்திரங்கள் பயன்பாட்டில் இருப்பதால், அதுபோன்ற உடற்பயிற்சிகள் பெண்களுக்கு இப்போது கிடைக்காமல் போய்விட்டது.

தற்போது ஜிம்,  வாக்கிங் இதுபோன்று பயிற்சிகள் செய்து உடலையும், உடல் நலத்தையும் பேண வேண்டிய கட்டாயம் ஏற்பட்டுள்ளது.

இயற்கையை நான் நேசிக்கிறேன், அதுபோல நீங்கள் எல்லோரும் இயற்கையை நேசிக்க வேண்டும். இளைய தலைமுறைகள் நல்ல வழிகளை பின்பற்றி நடக்க வேண்டும்.

இவ்வாறு திருச்சி சரக டிஐஜி ஆனி விஜயா தெரிவித்தார்.

இந்நிகழ்ச்சியின் நினைவாக மரக்கன்றுகளை நடவு செய்தனர்.

-ஆர்.சிராசுதீன்.

One Response

  1. MANIMARAN August 14, 2020 11:00 pm

Leave a Reply to MANIMARAN Cancel reply