மேற்கு ஆசியாவில் பதற்ற நிலைமையை அடுத்து, இந்திய அரசு எடுத்து வரும் நடவடிக்கை குறித்து இன்று புதுதில்லி தேசிய ஊடக மையத்தில் ஒரு ஊடக சந்திப்பு நடைபெற்றது. இதில், பெட்ரோலியம் மற்றும் இயற்கை எரிவாயு, துறைமுகங்கள், கப்பல் மற்றும் நீர்வழிகள் மற்றும் வெளியுறவு அமைச்சகங்களின் அதிகாரிகள், எரிபொருள் இருப்பு, கடல்சார் செயல்பாடுகள், அப்பகுதியில் உள்ள இந்தியக் குடிமக்களுக்கு வழங்கப்படும் உதவிகள், மற்றும் முக்கியத் துறைகளில் நிலைத்தன்மையை உறுதி செய்ய எடுக்கப்படும் நடவடிக்கைகள் குறித்த அண்மைத் தகவல்களைப் பகிர்ந்து கொண்டனர்.
மேற்கு ஆசியாவில் நிலவும் சூழ்நிலைக்கு மத்தியில், பெட்ரோலியப் பொருட்கள் மற்றும் எல்பிஜி ஆகியவற்றின் தடையற்ற இருப்பை உறுதி செய்ய எடுக்கப்படும் நடவடிக்கைகளை எடுத்துரைத்து, தற்போதைய எரிபொருள் விநியோக நிலவரம் குறித்து பெட்ரோலியம் மற்றும் இயற்கை எரிவாயு அமைச்சகம் ஊடகங்களுக்குத் தெரிவித்தது.
பெட்ரோல், டீசல் மற்றும் எல்பிஜி ஆகியவற்றின் இருப்பை உறுதி செய்ய அரசு அனைத்து முயற்சிகளையும் மேற்கொண்டு வருவதால், மக்கள் பீதியுடன் பெட்ரோல், டீசல் மற்றும் எல்பிஜி ஆகியவற்றை வாங்குவதைத் தவிர்க்குமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள்.
வதந்திகளை நம்ப வேண்டாம் என்றும், சரியான தகவல்களுக்கு அதிகாரப்பூர்வ தகவல்களை நம்புமாறும் மக்கள் அறிவுறுத்தப்படுகின்றனர்.
எல்பிஜி நுகர்வோர் டிஜிட்டல் முன்பதிவு தளங்களைப் பயன்படுத்துமாறும், விநியோகஸ்தர்களை நேரில் சந்திப்பதைத் தவிர்க்குமாறும் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.
பிஎன்ஜி மற்றும் மின்சார அல்லது இன்டக்ஷன் அடுப்புகள் போன்ற மாற்று எரிபொருள் மற்றும் சாதனங்களைப் பயன்படுத்துமாறு மக்கள் ஊக்குவிக்கப்படுகிறார்கள்.
தற்போதைய சூழ்நிலையில், அனைத்து மக்களும் தங்களின் அன்றாடப் பயன்பாட்டில் எரிசக்தியைச் சேமிக்கத் தேவையான முயற்சிகளை மேற்கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.
அத்தியாவசியப் பொருட்கள் சட்டம், 1955 மற்றும் எல்பிஜி கட்டுப்பாட்டு ஆணை, 2000 ஆகியவற்றின் கீழ், விநியோகத்தைக் கண்காணிக்கவும், பதுக்கல் மற்றும் கள்ளச் சந்தைக்கு எதிராக நடவடிக்கை எடுக்கவும் மாநில அரசுகளுக்கு அதிகாரம் அளிக்கப்பட்டுள்ளது.
பெட்ரோல், டீசல் மற்றும் எல்பிஜி உள்ளிட்ட அத்தியாவசியப் பொருட்களின் விநியோக நிலையைக் கண்காணிப்பதிலும் ஒழுங்குபடுத்துவதிலும் மாநிலங்கள்/யூனியன் பிரதேச அரசுகள் முதன்மைப் பங்கு வகிக்க வேண்டும். இந்திய அரசு அனைத்து மாநிலங்கள்/யூனியன் பிரதேசங்களுக்கும் பல கடிதங்கள் மற்றும் காணொளிக் காட்சி சந்திப்பு மூலம் இதை மீண்டும் வலியுறுத்தியுள்ளது.
வீட்டு உபயோக எல்பிஜி விநியோக நிலை:
தற்போது நிலவும் புவிசார் அரசியல் சூழ்நிலைக்கு இடையிலும், எல்பிஜி விநியோகம் தொடர்ந்து கண்காணிக்கப்பட்டு வருகிறது.
வீட்டு உபயோகத்திற்கான எல்பிஜி விநியோகத்திற்கு முன்னுரிமை அளிக்கப்பட்டுள்ளது.
2026 ஏப்ரல் 1-ஆம் தேதி முதல், 17.83 லட்சத்திற்கும் அதிகமான 5 கிலோ எஃடிஎல் சிலிண்டர்கள் விற்பனை செய்யப்பட்டுள்ளன.
நேற்று, நாடு முழுவதும் 81,000-க்கும் அதிகமான 5 கிலோ சிலிண்டர்கள் விற்பனை செய்யப்பட்டன
எல்பிஜி விநியோக மையங்களில் எந்தவிதமான தட்டுப்பாடு, தட்டுப்பாடுகளும் பதிவாகவில்லை.
நேற்று, தொழில்துறை அடிப்படையில் ஆன்லைன் எல்பிஜி சிலிண்டர் முன்பதிவுகள் 98 சதவீதம் அதிகரித்துள்ளன.
எஸ்.சதிஸ் சர்மா
