திருச்சி- சென்னை தேசிய நெடுஞ்சாலையில் திருச்சி டிவிஎஸ் டோல்கேட் மேம்பாலம் அருகே மின் மாற்றி (Transformer) ஏற்றிச் சென்ற மினி வேன் ஒன்று பழுதாகிச் சாலையில் நின்று கொண்டிருந்தது. இந்நிலையில் இன்று (ஆகஸ்ட் 3, 2026) மாலை 4.35 மணி அளவில் பயணிகளை ஏற்றிக் கொண்டு வந்த ஆட்டோ ஒன்று ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்து சாலையில் பழுதாகி நின்று கொண்டிருந்த வேன் பக்கவாட்டில் மோதியதில் ஆட்டோவில் இருந்த பெண் ஒருவருக்கு தலையில் பலத்த காயம் ஏற்பட்டு ரத்தம் கொட்டியது.
உடனே ஆம்புலன்ஸ்க்கும், காவல்துறைக்கும் தகவல் தெரிவிக்கப்பட்டது. தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த ஒரு போலீசார், அருகில் இருந்தவர்களின் உதவியுடன் பலத்தக் காயம் அடைந்த அந்த பெண்ணை தனியார் ஆம்புலன்ஸ் வாகனத்தில் ஏற்றி அருகில் இருந்த திருச்சி அப்போலோ மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
-Dr.துரைபெஞ்சமின், BAMS.,
M.A.,SOCIOLOGY,
Ex. Honorary A.W.Officer, Govt Of India,
Editor & Publisher,
www.ullatchithagaval.com
Director, UTL MEDIA TEAM
editorutlmedia@gmail.com
