புகழ்பெற்ற அஜந்தா, எல்லோரா பகுதியில் வான் சாகச நிகழ்ச்சியை நடத்த பரிசீலிக்க வேண்டும்: பாதுகாப்புதுறை அமைச்சர் ராஜ்நாத் சிங்கிற்கு கோரிக்கை.

மத்திய ஆயுஷ் துறை இணையமைச்சர் திரு.பிரதாப் ராவ் ஜாதவ், மத்தியப் பாதுகாப்பு துறை அமைச்சர் திரு.ராஜ்நாத்சிங்கிற்கு எழுதிய கடிதத்தில், மகாராஷ்டிரா மாநில சுற்றுலாத் துறையை மேம்படுத்தும் வகையில், 2026 நவம்பர் 23 முதல் 25 வரை நடைபெறவுள்ள வான் சாகச நிகழ்ச்சியை, லோனார், அஜந்தா, எல்லோரா பகுதியில் நடத்த பரிசீலிக்க வேண்டும் என கேட்டுக்கொண்டுள்ளார். யுனெஸ்கோவால் அங்கீகாரம் பெற்ற இந்தப் பகுதிகளில் வான் சாகச நிகழ்ச்சி நடத்துவது, சுற்றுலாப் பயணிகளை ஈர்ப்பதுடன், இளைஞர்களுக்கு இந்திய விமானப்படையில் சேர்வதற்கான உத்வேகத்தை கொடுக்கும் எனவும் குறிப்பிட்டுள்ளார். எனவே, வான் சாகசத்தில் திறமை வாய்ந்த சூர்யகிரண் குழுவினரின் சாகச நிகழ்ச்சியை, லூனார், அஜந்தா, எல்லோரா பகுதியில் நடத்த பரிசீலினை செய்ய வேண்டும் என அமைச்சர் திரு பிரதாப் ராஜ் ஜாதவ் தெரிவித்துள்ளார்

Leave a Reply