சஹ்யாத்ரி மற்றும் குலிஷ் ஆகிய இந்திய கடற்படைக் கப்பல்கள் AIME 2026-ல் தங்கள் பங்கேற்பை நிறைவு செய்தன.

நம்பிக்கையில் நங்கூரமிட்டு, கடலில் ஒன்றுபட்டு’ என்ற கருப்பொருளின் கீழ் பிலிப்பைன்ஸில் நடத்தப்பட்ட ஆசியான்-இந்தியா கடல்சார் பயிற்சியில் (AIME 2026) இந்திய கடற்படைக் கப்பல்களான சஹ்யாத்ரி மற்றும் குலிஷ் ஆகியவை தங்களது பங்கேற்பை நிறைவு செய்தன . இந்தப் பயிற்சியானது, துறைமுகம் மற்றும் கடல் கட்டங்கள் மூலம் தொழில்முறை கலந்துரையாடல், செயல்பாட்டு ஒருங்கிணைப்பு மற்றும் கடல்சார் பயிற்சிக்கான வாய்ப்புகளை வழங்கியது.

தொடக்க விழாவைத் தொடர்ந்து துறைமுகக் கட்டம் நடைபெற்றது. இதில் முக்கியத் தலைவர்களின் சந்திப்புகள், விளையாட்டு நிகழ்வுகள், யோகா, சமூகக் கலந்துரையாடல் மற்றும் துறைசார் வல்லுநர் பரிமாற்றங்கள் உள்ளிட்ட பல்வேறு நிகழ்ச்சிகள் அடங்கியிருந்தன. ஒரு மேசைவழிப் பயிற்சி, செயல்பாட்டு ஒத்திசைவு மற்றும் பயணத்திற்கு முந்தைய விளக்கவுரை ஆகியவை கடல் கட்டத்திற்கான ஒருங்கிணைப்பு மற்றும் தயாரிப்புக்கு வழிவகுத்தன.

கடல்சார் கட்டத்தின் போது, ஐஎன்எஸ் சஹ்யாத்ரி மற்றும் ஐஎன்எஸ் குலிஷ் ஆகியவை மனிதாபிமான உதவி மற்றும் பேரிடர் நிவாரணம், விசிட்-போர்டு-சர்ச்-சீசர் (VBSS) மற்றும் பயணத்தின்போதான எரிபொருள் நிரப்புதல் பயிற்சிகள் உள்ளிட்ட ஒருங்கிணைந்த கடல்சார் பயிற்சிகளில் பங்கேற்றன. ஹெலிகாப்டர் பயிற்சிகளில் குறுக்குத் தள தரையிறக்கங்கள், செங்குத்து எரிபொருள் நிரப்புதல் மற்றும் கேஸ்வேக் (CASEVAC) பயிற்சிகள் அடங்கியிருந்தன. இந்த நடவடிக்கைகள், பங்கேற்ற கடல்சார் படைகளுக்கு இடையே ஒருங்கிணைப்பையும், ஒருங்கிணைந்த செயல்பாட்டுத் திறனையும் மேம்படுத்தின.

AIME 2026-இன் துறைமுக மற்றும் கடல் கட்டங்கள், நம்பிக்கையை வலுப்படுத்தி, ஒருங்கிணைந்த செயல்பாட்டுத் திறனை மேம்படுத்தி, திறமையான கடல்சார் கூட்டாண்மைகளுக்குப் பங்களித்தன. ஐ.என்.எஸ் சஹ்யாத்ரி மற்றும் ஐ.என்.எஸ் குலிஷ் ஆகியவற்றின் பங்கேற்பு, இந்தியாவின் ‘ஆக்ட் ஈஸ்ட்’ கொள்கை மற்றும் ‘மகாசாகர் ‘ (பிராந்தியங்கள் முழுவதும் பாதுகாப்பு மற்றும் வளர்ச்சிக்கான பரஸ்பர மற்றும் முழுமையான முன்னேற்றம்) தொலைநோக்குப் பார்வைக்கு இணங்க , கூட்டாளர் கடல்சார் படைகளுடன் தொடர்ந்து ஈடுபடுவதில் இந்தியக் கடற்படையின் உறுதிப்பாட்டை மீண்டும் உறுதிப்படுத்தியது.

Leave a Reply