தேசிய கால்நடைப் பராமரிப்பு இயக்கத்தின் கீழ், தமிழ்நாட்டிற்கு ரூ. 12,521.83 லட்சம் மத்திய நிதியுதவி.

பால்வள உள்கட்டமைப்பு, கால்நடைகளின் மேம்பாடு, தொழில்முனைவு ஊக்குவிப்பு மற்றும் கால்நடை சுகாதாரத் தயார்நிலை ஆகியவற்றில் மேற்கொள்ளப்படும் நோக்கம் சார்ந்த நடவடிக்கைகளின் மூலம், பால் பண்ணை மற்றும் கால்நடைத் துறைகளை மத்திய அரசு தொடர்ந்து வலுப்படுத்தி வருகிறது.

தேசிய கால்நடைப் பராமரிப்பு இயக்கத்தின் (ஆர்ஜிஎம்) கீழ், உள்நாட்டு கால்நடை இனங்களின் மேம்பாடு, மரபணு மேம்பாடு மற்றும் உற்பத்தித்திறன் அதிகரிப்பு ஆகியவற்றில் குறிப்பிடத்தக்க முன்னேற்றம் எட்டப்பட்டுள்ளது. கடந்த மூன்று ஆண்டுகளில் தமிழ்நாடு ரூ. 12,521.83 லட்சம் மத்திய நிதியுதவியைப் பெற்று, அதை முழுமையாகப் பயன்படுத்திக்கொண்டது. இந்த ஆதரவின் மூலம் 36.13 லட்சம் செயற்கைக் கருவூட்டல்கள், நான்கு விந்து நிலையங்களின் மேம்பாடு, கிராமப்புற இந்தியாவில் பல்நோக்கு செயற்கை கருவூட்டல் தொழில்நுட்ப வல்லுநர்கள் (மைத்ரிகள்) 475 பேருக்கு பயிற்சி அளித்து உபகரணங்கள் வழங்குதல், இரண்டு ஐவிஎஃப் ஆய்வகங்களின் உருவாக்கம், பாலின வாரியாகப் பிரிக்கப்பட்ட விந்து மையங்களின் நிர்மாணம், மூன்று இனப் பெருக்கப் பண்ணைகளின் கட்டமைப்பு மற்றும் கன்றுக்குட்டி வளர்ப்பு மையங்களுக்கு உதவுதல் ஆகியவை சாத்தியமாகின.

மத்திய மீன்வளம், கால்நடை பராமரிப்பு மற்றும் பால்வளத்துறை அமைச்சர் திரு ராஜீவ் ரஞ்சன் சிங் என்கிற லாலன் சிங், மக்களவையில் இந்தத் தகவலைத் தெரிவித்தார்.

Leave a Reply