இந்திய விமானப்படையின் சூர்யகிரண் விமான சாகசக் குழு, 2026 செப்டம்பர் 19, 20 ஆகிய தேதிகளில் முதன்முறையாக மீரட்டல், சாகச நிகழ்வுகளை நடத்தியது. மாணவர்கள், தேசிய மாணவர் படையினர், சாரணர் இயக்கத் தன்னார்வலர்கள் உட்பட ஒரு லட்சத்திற்கும் அதிகமானோர், இரண்டு நாட்களில் இந்த சாகசக் காட்சியைக் காண திரண்டனர்.
2026 செப்டம்பர் 20 அன்று, இந்த நிகழ்ச்சியை பாதுகாப்புத் துறை இணையமைச்சர் திரு சஞ்சய் சேத் அவர்கள் கண்டுகளித்தார். இது குறித்து சமூக ஊடக எக்ஸ் தளத்தில் பதிவிட்டுள்ள திரு சஞ்சய் சேத், இந்த நிகழ்வை ஒழுக்கம், துல்லியம், குழுப்பணி, தொழில்முறை சேவை ஆகியவற்றின் ஒரு குறிப்பிடத்தக்க கலவை என்றும், இந்திய விமானப்படையின் புகழ்பெற்ற திறன்களுக்கு இது ஒரு சான்று என்றும் விவரித்துள்ளார்.
இந்த அணிவகுப்பின் முதல் நாளில் சமூக ஊடக் எக்ஸ் தளத்தில் பதிவிட்ட உத்தரப் பிரதேச முதலமைச்சர் திரு யோகி ஆதித்யநாத், மூவண்ணக் கொடியின் வண்ணங்களால் வானத்தை அலங்கரித்த விமானிகளின் பிரமிக்க வைக்கும் துல்லியத்தையும் தைரியத்தையும் பாராட்டினார். இது மாநிலத்திற்கும் ஒட்டுமொத்த தேசத்திற்கும் ஒரு பெருமைமிக்க தருணம் என்றும் அவர் குறிப்பிட்டார்.
1996-ல் நிறுவப்பட்ட சூர்யகிரண் சாகச குழு, ஆசியாவிலேயே 9 விமானங்களைக் கொண்ட ஒரே வானூர்தி சாகசக் குழு என்ற பெருமையைப் பெற்றுள்ளது. சூர்யாகிரண் ஒரு வானூர்தி சாகசக் குழு என்பதைத் தாண்டி இந்திய விமானப்படையின் தூதுவர்கள்’ என்ற வகையில், அது பறக்கும் இடமெல்லாம் விமனப் படையின் சிறப்பையும் சேவை உணர்வையும் எடுத்துச் செல்கிறது.
திவாஹர்
