மீள்திறன், வலிமை, புதுமை, அனைவரையும் உள்ளடக்கிய வளர்ச்சி மற்றும் கருணையுடன் விக்ஷித் பாரத்@2047-ஐ நோக்கி இந்தியா முன்னேறுகிறது!- பாதுகாப்பு அமைச்சர்.

விக்ஸித் பாரத்@2047 என்ற தொலைநோக்குப் பார்வையை நனவாக்கும் வகையில், குடிமக்களிடையே மீள்திறன், உறுதிப்பாடு, கருணை, புதுமை, வலிமை, அனைவரையும் உள்ளடக்கிய செழிப்பு மற்றும் வலுவான தேசிய அடையாள உணர்வை வளர்ப்பதில் சிறப்பு கவனம் செலுத்தி அரசாங்கம் தேசத்திற்கு சேவை செய்து வருவதாக பாதுகாப்பு அமைச்சர் திரு ராஜ்நாத் சிங் தெரிவித்துள்ளார். செப்டம்பர் 18, 2026 அன்று கேரளாவின் கொச்சியில் நடைபெற்ற ஒரு நிகழ்வில் உரையாற்றிய அவர், பிரதமர் திரு நரேந்திர மோடியின் தலைமையில், விடாமுயற்சிக்கான தைரியம், குடிமக்களின் பாதுகாப்பு, சேவை மனப்பான்மை, இலக்குகளை அடைவதற்கான உறுதிப்பாடு, கருணை, வருங்கால சந்ததியினருக்கு உத்வேகம் அளித்தல், தேசிய திறன்களை வலுப்படுத்துதல், அனைவரையும் உள்ளடக்கிய செழிப்பு மற்றும் உலகளாவிய தலைமைத்துவத்தை உறுதி செய்தல் போன்ற இந்தியாவின் பல நூற்றாண்டுகள் பழமையான விழுமியங்களிலிருந்து உத்வேகம் பெற்று இந்தியா வளர்ச்சிப் பாதையில் முன்னேறி வருவதாக வலியுறுத்தினார்.

2014-ஆம் ஆண்டுக்கு முன்பு, ஊழல் மற்றும் முறைகேடான ஆட்சி போன்ற குறிப்பிடத்தக்க சவால்களை இந்தியா எதிர்கொண்டதாகவும், அவை மக்களின் மன உறுதியைக் குலைத்திருந்ததாகவும் பாதுகாப்பு அமைச்சர் சுட்டிக்காட்டினார். மேலும், கடந்த 12 ஆண்டுகளில் நாட்டின் முன்னேற்றமானது, இடர்பாடுகளை நம்பிக்கையுடன் எதிர்கொண்டு, சவால்களை வாய்ப்புகளாக மாற்றும் அதன் திறனால் வடிவமைக்கப்பட்டுள்ளது என்றும் அவர் குறிப்பிட்டார். “கடந்த 12 ஆண்டுகளில், உலகம் கோவிட்-19 போன்ற ஒரு பெருந்தொற்றை எதிர்கொண்டதுடன், பல போர்களையும் கண்டது. இவை உலகப் பொருளாதாரத்தில் ஆழமான தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளன. உலகளாவிய சவால்கள் இருந்தபோதிலும், நாம் ஒரு தன்னிறைவு பெற்ற மற்றும் வளர்ந்த நாடாக மாறுவதற்கான பாதையில் சீராக முன்னேறி வருகிறோம்,” என்று அவர் கூறினார்.

Leave a Reply