முன்னாள் பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி வீடு உள்பட பல இடங்களில் சென்னை மத்திய குற்றப்பிரிவு (CCB) போலீசார் இன்று (செப்டம்பர் 16, 2026) காலை முதல் அதிரடி சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர்.
சோதனைக்கானக் காரணம்:
- தனியார் பள்ளி நிர்வாகங்களிடம் அரசு அனுமதி மற்றும் நிரந்தர அங்கீகாரம் வழங்கிய வகையில் சுமார் ரூ. 100 கோடி வசூலிக்கப்பட்டதாக வந்த புகாரின் அடிப்படையில் தமிழ்நாட்டின் தனியார் பள்ளிகள் சங்கத்தின் பெயரில் முறைகேடுகளில் ஈடுபட்டதாகக் கூறப்படும் பி.டி. அரசக்குமார் ஏற்கனவே கைது செய்யப்பட்டு தடுப்புக் காவலில் அடைக்கப்பட்டுள்ளார். அவர் அளித்த வாக்கு மூலத்தின் அடிப்படையில் தான் இன்று முன்னாள் பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி வீட்டில் இந்த சோதனை நடக்கிறது.
சோதனையின் விவரங்கள்:
- திருச்சி தென்னூர் அண்ணா நகரில் உள்ள அவரது வீடு மற்றும் சென்னை உள்ளிட்ட பல இடங்களில் ஒரே நேரத்தில் இந்த சோதனைகள் நடைபெற்று வருகின்றன. சோதனைகள் முழுமையாக நிறைவடைந்த பின்பு தான் முழு விவரங்கள் அதிகாரப்பூர்வமாக தெரியவரும்.
தகவல் அறிந்து திருச்சி தென்னூர் அண்ணா நகரில் உள்ள அன்பில் மகேஷ் பொய்யாமொழி வீட்டிற்கு வந்த முன்னாள் அமைச்சர் கே. என்.நேருவை உள்ளே செல்ல காவல்துறையினர் அனுமதி மறுத்து விட்டனர். இதனால் சோதனை முடிந்தவுடன் வந்துப் பார்ப்பதாக சொல்லிவிட்டு அங்கிருந்து அவர் திரும்பி சென்றார்.
–கே.பி.சுகுமார்.
