பிரதமர் திரு நரேந்திர மோடி, 18-வது பிரிக்ஸ் உச்சி மாநாட்டின் ஒரு பகுதியாக, இன்று (2026 செப்டம்பர் 12) அபுதாபி இளவரசர் திரு ஷேக் காலித் பின் முகமதுவைச் சந்தித்துப் பேசினார்.
வலுவான அரசியல், கலாச்சார, வர்த்தக, எரிசக்தி தொடர்புகளையும் மக்களுக்கு இடையேயான உறவுகளையும் கொண்டுள்ள இந்தியா-ஐக்கிய அரபு அமீரகம் இடையேயான விரிவான உத்திசார் ஒத்துழைப்பின் முக்கியத்துவத்தை இரு தலைவர்களும் எடுத்துரைத்தனர். ஐக்கிய அரபு அமீரகத்தின் அதிபர் திரு ஷேக் முகமது பின் சயீத் அல் நஹ்யான், ஜனவரி 2026-ல் இந்தியாவிற்கு மேற்கொண்ட, பயணங்களையும், பிரதமர் திரு நரேந்திர மோடி மே 2026-ல் ஐக்கிய அரபு அமீரகத்திற்கு மேற்கொண்ட பயணத்தையும் அவர்கள் நினைவு கூர்ந்தனர்.
இந்தியாவின் தலைமையின் கீழ் பிரிக்ஸ் அமைப்பில் ஐக்கிய அரபு அமீரகம் ஆற்றிய செயல்திறன் மிக்க, ஆக்கப்பூர்வமான பங்களிப்பை பிரதமர் பாராட்டினார். இந்தியாவின் தலைமையின் கீழ் பிரிக்ஸ் அமைப்பிற்குள் ஏற்பட்ட நேர்மறையான விளைவுகளை தலைவர்கள் வரவேற்றதோடு, இரு நாடுகளும் தங்களின் பொதுவான நலன்களையும் முன்னுரிமைகளையும் முன்னெடுத்துச் செல்லவும், பிரிக்ஸ் ஒத்துழைப்பை மேலும் வலுப்படுத்தவும் தொடர்ந்து நெருக்கமாக இணைந்து செயல்பட ஒப்புக்கொண்டனர்.
பல்வேறு துறைகளில் இருதரப்பு உறவுகளில் ஏற்பட்டுள்ள முன்னேற்றத்தை தலைவர்கள் வரவேற்றனர். இந்தியாவின் மிகப்பெரிய ஒருங்கிணைந்த அலுமினிய முதலீடான, ஒடிசாவில் 11.5 பில்லியன் அமெரிக்க டாலர் மதிப்பிலான ஒருங்கிணைந்த புதிய அலுமினியத் திட்டத்தின் மேம்பாட்டில் முதலீடு செய்வதாக ஐக்கிய அரபு அமீரகத்தைச் சேர்ந்த நிறுவனம் அறிவித்ததை அவர்கள் மகிழ்ச்சியுடன் குறிப்பிட்டனர். இத்திட்டம் ஒடிசாவை ஒரு உலகளாவிய அலுமினிய உற்பத்தி மையமாக நிலைநிறுத்தும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
திவாஹர்
