அருள்மிகு மதுரை மீனாட்சி அம்மன் கோவில் மகா கும்பாபிஷேகம் செப்டம்பர் 17ஆம் தேதி வியாழக்கிழமை நடைபெற இருப்பதை முன்னிட்டு பாதுகாப்பு ஏற்பாடுகள் உட்பட அனைத்துப் பணிகளும் மும்முரமாக நடைபெற்று வருகிறது.
இந்நிலையில் அங்கு மேற்கொள்ளப்பட்டு வரும் பாதுகாப்பு ஏற்பாடுகள் குறித்து ஆய்வு செய்வதற்காக தமிழ்நாடு காவல்துறை தலைமை இயக்குநர் (DGP) மகேஷ் குமார் அகர்வால் இன்று (14.09.2026, திங்கட்கிழமை) மதுரைக்கு வருகை தந்து, மதுரை மாநகர காவல் ஆணையர் எஸ். ராஜேந்திரன் மற்றும் காவல்துறை உயர் அதிகாரிகளுடன் கலந்துரையாடினார். மேலும், மதுரை மாநகர காவல்துறையின் பல்வேறு காவல் பணிகள் மற்றும் ரோந்துப் பணிகள் உள்ளிட்ட முன்னெச்சரிக்கை செயல்பாடுகள் குறித்தும் அவர் ஆலோசனை மேற்கொண்டார்.
-Dr.துரைபெஞ்சமின், BAMS.,
M.A.,SOCIOLOGY,
Ex. Honorary A.W.Officer, Govt Of India,
Editor & Publisher,
www.ullatchithagaval.com
Director, UTL MEDIA TEAM
editorutlmedia@gmail.com
