ஆசிய விளையாட்டுப் போட்டியில் மகளிருக்கான 53 கிலோ ஃப்ரீஸ்டைல் மல்யுத்தப் பிரிவில் வெள்ளிப் பதக்கம் வென்ற அந்திம் பங்கலுக்கு பிரதமர் திரு நரேந்திர மோடி வாழ்த்துத் தெரிவித்துள்ளார்.
அவரது செயல்பாடு முன்மாதிரியானது என வர்ணித்துள்ள பிரதமர், அவர் ஒரு அற்புதமான செயல்திறனை வெளிப்படுத்தி இருப்பதாகவும் கூறியுள்ளார்.
அந்திம் பங்கல் தொடர்ந்து வெற்றி பெற வாழ்த்து தெரிவித்துள்ளதோடு, அவர் நாட்டிற்கு மேலும் பல பெருமைகளைச் சேர்த்து, மற்ற விளையாட்டு வீரர்களை ஊக்குவிப்பார் என்றும் பிரதமர் நம்பிக்கை தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து சமூக ஊடக எக்ஸ் தளத்தில் பிரதமர் அலுவலகம் வெளியிட்டுள்ள பதிவில் கூறியிருப்பதாவது:
“ஆசிய விளையாட்டுப் போட்டியில் அந்திம் பங்கல் வென்ற வெள்ளிப் பதக்கம் உண்மையிலேயே ஒரு முன்மாதிரியானது! மகளிர் 53 கிலோ ஃப்ரீஸ்டைல் மல்யுத்தப் போட்டியில் அவரது அற்புதமான செயல்பாட்டிற்கு வாழ்த்துகள். அவர் தொடர்ந்து நாட்டிற்கு மேலும் பல பெருமைகளைச் சேர்த்து, மற்ற விளையாட்டு வீரர்களை ஊக்குவிக்கட்டும்: பிரதமர் நரேந்திரமோடி”
திவாஹர்
