ஐசிஎஸ்ஐ-யின் 58-வது நிறுவன நாள் விழாவில் குடியரசு துணைத்தலைவர் சி பி ராதாகிருஷ்ணன் பங்கேற்பு

குடியரசு துணைத்தலைவர் திரு சி பி ராதாகிருஷ்ணன் இன்று (04.10.2026) புதுதில்லியில் உள்ள பாரத் மண்டபத்தில் நடைபெற்ற இந்திய நிறுவனச் செயலாளர்கள் நிறுவனமான ஐசிஎஸ்ஐ-ன் (ICSI) 58-வது நிறுவன நாள் விழாவில் உரையாற்றினார். வெளிப்படையான, அறநெறி சார்ந்த, அனைவரையும் உள்ளடக்கிய பெருநிறுவன நிர்வாகத்தை வலுப்படுத்துவதில் ஐசிஎஸ்ஐ-ன் சுமார் 60 ஆண்டுகாலப் பயணத்தை அவர் பாராட்டினார்.

நல்லாட்சி என்பது முதலீட்டாளர்களின் நம்பிக்கையையும் பொதுமக்களின் நம்பிக்கையையும் நிலைநிறுத்தும் ஒரு கண்ணுக்குப் புலப்படாத உள்கட்டமைப்பு என்று அவர் கூறினார். மேலும், நிறுவனச் செயலாளர்களை ஆட்சி நிர்வாகத்தின் பாதுகாவலர்கள் என்றும், இந்திய நிறுவனங்களின் நம்பிக்கை கட்டமைப்பின் மையம் என்றும் அவர் விவரித்தார்.

மக்களைப் பேணுவதற்கும், பொது நம்பிக்கையைப் பாதுகாப்பதற்கும் நல்லாட்சி அவசியம் என்பதை வலியுறுத்திய அவர், மக்கள் வரி செலுத்தும் போது, பொறுப்பான நிர்வாகத்தை எதிர்பார்க்கிறார்கள் என்றார். முதலீட்டாளர்களும் நிறுவனங்களும் சிறந்த பெருநிறுவன நிர்வாகத்தின் மூலம் தங்கள் நலன்களைப் பாதுகாக்க வேண்டும் என்று எதிர்பார்ப்பதாகவும் அவர் கூறினார். நல்லாட்சியை மேம்படுத்துவதில் ஐசிஎஸ்ஐ ஒரு முக்கிய நிறுவனமாக உருவெடுத்துள்ளது என்று அவர் குறிப்பிட்டார்.

இந்த நிறுவனம் பெருநிறுவன வெளிப்படைத்தன்மை, முதலீட்டாளர் நம்பிக்கை, உலகப் பொருளாதாரத்தில் இந்தியாவின் நிலையை வலுப்படுத்துவது ஆகியவற்றில் முக்கியப் பங்கு வகிப்பதாக திரு சி.பி. ராதாகிருஷ்ணன் கூறினார்.

பொருளாதார முன்னேற்றத்திற்கு முதலீட்டாளர் நம்பிக்கை அவசியம் என்று அவர் கூறினார். நிறுவனச் செயலாளர்கள் இந்தக் கட்டமைப்பின் மையத்தில் உள்ளனர் என்றும், நிறுவனங்கள் பொறுப்புடன் வளர உதவுவதில் அவர்கள் முக்கியப் பங்கு வகிக்கின்றனர் என்றும் அவர் குறிப்பிட்டார்.

2047-ம் ஆண்டில் ஒரு வலிமையான, தற்சார்புமிக்க, வளர்ச்சியடைந்த இந்தியாவைக் கட்டியெழுப்புவதில் ஐசிஎஸ்ஐ-யும் பங்களிக்கும் என்று குடியரசுத் துணைத் தலைவர் திரு சி.பி. ராதாகிருஷ்ணன் கூறினார்.

ஐசிஎஸ்ஐ தலைவர், ஐசிஎஸ்ஐ செயலாளர், சி.எஸ். ஆசிஷ் மோகன் உள்ளிட்டோர் இந்நிகழ்ச்சியில் கலந்துகொண்டனர்.

Leave a Reply