13 செப்டம்பர் 2026 முதல் 31 டிசம்பர் 2026 வரை, நேபாள மின்சார ஆணையத்திற்கு ஒரு நாளைக்கு 18 மணி நேரம் அதாவது நள்ளிரவு 12 மணி முதல் மாலை 6 மணி வரை மின்சாரம் வழங்க மத்திய மின்துறை அமைச்சகம் ஒப்புதல் அளித்துள்ளது.
முசாஃபர்பூர் – தல்கேபார் 400 கேவி நேர்மின்னோட்ட வழித்தடம் வழியாக 600 மெகாவாட் வரையிலும், தனக்பூர் – மகேந்திரநகர் 132 கேவி குறுக்கு மின்னோட்ட வழித்தடம் வழியாக 54 மெகாவாட் வரையிலும் மின்சாரம் அனுப்ப அனுமதி வழங்கப்பட்டுள்ளது. ஜனவரி 2027 முதல் வழங்கப்பட வேண்டிய மின்சாரத்தின் அளவு, டிசம்பர் 2026-ல் மறுஆய்வு செய்யப்படும்.
சமீபத்திய வெள்ளப்பெருக்குகள் நேபாளத்தின் நீர்மின் உள்கட்டமைப்பில் பெரிய சேதத்தை ஏற்படுத்தி, அதன் உள்நாட்டு மின் உற்பத்தித் திறனைக் குறைத்து, மின்சாரத்திற்கான கூடுதல் தேவையையும் உருவாக்கியுள்ளன. இந்த நிலையில் இந்தியாவின் இந்த ஒப்புதல், இக்கடினமான காலகட்டத்தில் நேபாளம் தனது மின்சாரத் தேவைகளைப் பூர்த்தி செய்ய உதவுவதோடு, இந்தியாவுக்கும் நேபாளத்துக்கும் இடையிலான நெருக்கமான, நீண்டகால எரிசக்தி ஒத்துழைப்பை மேலும் வலுப்படுத்தும்.
நேபாளத்திற்கு ஆதரவளிப்பதிலும், எரிசக்தித் துறையில் இருதரப்பு ஒத்துழைப்பை வலுப்படுத்துவதிலும் இந்தியா உறுதியாக உள்ளது.
திவாஹர்
