கிழக்குக் கடற்படை செயல்பாட்டுப் பணியின் ஒரு பகுதியாக, ஐஎன்எஸ் குலிஷ் நீர்மூழ்கிக் கப்பல் நேற்று (12 செப்டம்பர் 2026) கம்போடியாவின் ரீம் கடற்படைத் தளத்திற்கு சென்றடைந்தது. இந்தியக் கடற்படைக்கும் கம்போடிய கடற்படைக்கும் இடையிலான கடல்சார் ஒத்துழைப்பை மேலும் வலுப்படுத்துவதையும், தொழில்முறை உறவுகளை மேம்படுத்துவதையும் இந்தப் பயணம் நோக்கமாகக் கொண்டுள்ளது.
இந்தக் கப்பலை கம்போடிய கடற்படையின் பிரதிநிதிகளும், கம்போடியாவில் உள்ள இந்தியத் தூதரக அதிகாரிகளும் வரவேற்றனர். இந்தப் பயணத்தின்போது , தொழில்முறை கலந்துரையாடல்கள், அறிமுகப் பயணங்கள், விளையாட்டுப் போட்டிகள், கட்டமைக்கப்பட்ட கடற்படை ஈடுபாடுகள் நடைபெறும். இவை, பணியாளர்கள் தங்கள் துறைசார் அறிவைப் பரிமாறிக் கொள்ளவும், செயல்பாட்டு ஒருங்கிணைப்பை மேம்படுத்தவும் வாய்ப்புகளை வழங்கும்.
திவாஹர்
