அரசின் முதன்மைத் திட்டங்களால் வேலையின்மை விகிதம் 6%-லிருந்து 3.2%-ஆகக் குறைந்துள்ளது!- மத்திய அமைச்சர் டாக்டர் எல். முருகன்.

பிரதமர் திரு நரேந்திர மோடி அவர்கள், நாடு முழுவதும் 45 இடங்களில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த 20வது ரோஜ்கார் மேளாவில் காணொளிக் காட்சி மூலம் பங்கேற்று, புதிதாகப் பணியமர்த்தப்பட்ட 51,000க்கும் மேற்பட்ட இளைஞர்களுக்கு நியமனக் கடிதங்களை வழங்கினார்.

மத்திய தகவல், ஒளிபரப்பு மற்றும் நாடாளுமன்ற விவகாரங்கள் துறை இணை அமைச்சர் டாக்டர் எல். முருகன், சென்னையில் உள்ள டி.ஜி. வைஷ்ணவ் கல்லூரியில் நடைபெற்ற ரோஜ்கார் மேளாவில் கலந்துகொண்டார். அவர், பல்வேறு மத்திய அரசு அமைச்சகங்கள், துறைகள் மற்றும் நிறுவனங்களுக்குப் புதிதாகத் தேர்ந்தெடுக்கப்பட்ட 285 நபர்களுக்கு நியமனக் கடிதங்களை வழங்கியதுடன், வருமான வரித் துறை, தொழிலாளர் மாநில காப்பீட்டுக் கழகம் (ESIC), இந்திய விமான நிலைய ஆணையம், பாதுகாப்பு அமைச்சகம், அஞ்சல் துறை, ஜவஹர்லால் முதுநிலை மருத்துவக் கல்வி மற்றும் ஆராய்ச்சி நிறுவனம் (JIPMER) மற்றும் தெற்கு ரயில்வே உள்ளிட்ட முக்கிய அமைப்புகளில் இணையும் இளைஞர்களுக்குத் தனது நல்வாழ்த்துக்களையும் தெரிவித்தார்.

இந்நிகழ்ச்சியில் பேசிய மத்திய அமைச்சர் டாக்டர் எல். முருகன், அரசுப் பணியில் புதிதாக இணையும் இளைஞர்கள், 2047-ஆம் ஆண்டுக்குள் ‘விக்ஷித் பாரத்’ என்ற தொலைநோக்குப் பார்வையை அடைவதில் முக்கியப் பங்கு வகிப்பார்கள் என்று கூறினார். புதிதாகப் பணியில் சேருபவர்கள், தங்களது பொறுப்புகளை வெறும் வேலைவாய்ப்பைப் பெறுவதாக மட்டும் கருதாமல், தேசத்திற்குச் சேவை செய்வதற்கும் அதன் முழுமையான வளர்ச்சிக்குப் பங்களிப்பதற்குமான ஒரு வாய்ப்பாகக் கருத வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தினார்.

Leave a Reply