சென்னை ஓபன் சர்வதேச மகளிர் டென்னிஸ் சாம்பியன்ஷிப்-2026 போட்டிகளை சிறப்பாக நடத்துவதற்கு முதல்வர் விஜய் ரூ.10 கோடி நிதி ஒதுக்கியுள்ளார்.
தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையம் மற்றும் தமிழ்நாடு டென்னிஸ் சங்கம் சார்பில் சென்னை ஓபன் சர்வதேச மகளிர் டென்னிஸ் சாம்பியன்ஷிப்-2026 போட்டிகள் நவம்பர் மாதம் நடத்தப்பட உள்ளன. இந்தப் போட்டிகள் நுங்கம்பாக்கத்தில் அமைந்துள்ள டென்னிஸ் அரங்கில் நடைபெற உள்ளன.
தற்போது இதற்கான முன்னேற்பாடுகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. மேலும், நடப்பாண்டு நடைபெறவுள்ள போட்டிகளில் உலகின் முன்னணி மகளிர் டென்னிஸ் வீராங்கனைகள் கலந்துகொள்ள இருக்கின்றனர்.
இந்நிலையில், தமிழ்நாடு டென்னிஸ் சங்கத்தின் தலைவர் விஜய் அமிர்தராஜ் தலைமையிலான குழுவினர், முதல்வர் விஜய்யை சென்னை தலைமைச் செயலகத்தில் இன்று சந்தித்துப் பேசினர். அதன்பின் டென்னிஸ் போட்டிகளை சிறப்பாக நடத்துவதற்காக தமிழக அரசின் சார்பில் ரூ.10 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்படும் என்று முதல்வர் விஜய் அறிவித்துள்ளார்.
எஸ்.திவ்யா
