21 ஆம் நூற்றாண்டு பாரதத்திற்கே உரியது; 2047-ஆம் ஆண்டுக்குள் உயிரிப் பொருளாதாரம் 1 டிரில்லியன் டாலரை எட்டும் !- மத்திய அமைச்சர் டாக்டர் ஜிதேந்திர சிங் .

அறிவியல் மற்றும் தொழில்நுட்பம், புவி அறிவியல் துறைகளின் (தனிப் பொறுப்பு) மத்திய இணை அமைச்சரும், பிரதமர் அலுவலகம், பணியாளர், பொதுக் குறைகள், ஓய்வூதியங்கள், அணுசக்தி மற்றும் விண்வெளித் துறை இணை அமைச்சருமான டாக்டர் ஜிதேந்திர சிங் இன்று கூறுகையில், 21 ஆம் நூற்றாண்டு இந்தியாவின் நூற்றாண்டாக இருக்கும் என்றும், அது உயிரியல் சார்ந்த பொருளாதாரத்தால் இயக்கப்படும் என்றும், நாட்டின் உயிரிப் பொருளாதாரம் 2047 ஆம் ஆண்டுக்குள் 1 டிரில்லியன் டாலராக வளரும் என்று கணிக்கப்பட்டுள்ளது என்றும் தெரிவித்தார்.

ஐஐடி ரூர்க்கியில் நடைபெற்ற சர்வதேச மாநாட்டில் காணொளி வாயிலாக உரையாற்றிய அவர், கொள்கை சீர்திருத்தங்கள், வலுவான நிறுவனக் கட்டமைப்புகள் மற்றும் வேகமாக விரிவடைந்து வரும் புத்தாக்கச் சூழலமைப்பு ஆகியவற்றின் ஆதரவுடன், மரபணு முதல் குபிட் வரையிலும், கடலின் ஆழம் முதல் விண்வெளி வரையிலும் முழு அளவிலான தொழில்நுட்பத் திறனை நோக்கி இந்தியா தீர்க்கமாக முன்னேறி வருகிறது என்று கூறினார்.

ஐஐடி ரூர்க்கியில் நடைபெற்ற “விஷன் 2047: வளமான மற்றும் மாபெரும் பாரதம் 2.0” என்ற தலைப்பிலான சர்வதேச மாநாட்டில் அமைச்சர் சிறப்புரை ஆற்றினார். இந்த மாநாட்டை ஐஐடி ரூர்க்கி மற்றும் சுதேசி ஷோத் சன்ஸ்தான் இணைந்து ஏற்பாடு செய்திருந்தன. இதில் இந்தியா மற்றும் வெளிநாடுகளைச் சேர்ந்த 100-க்கும் மேற்பட்ட கல்வி நிறுவனங்கள் பங்கேற்றன. ஐஐடி ரூர்க்கியின் இயக்குநர் பேராசிரியர் கே.கே. பந்த் மற்றும் பத்மஸ்ரீ விருது பெற்ற ஸ்ரீதர் வேம்பு ஆகியோரும் இந்நிகழ்வில் கலந்துகொண்டனர்.

பிரதமர் நரேந்திர மோடியின் ‘விக்ஷித் பாரத் 2047’ தொலைநோக்குப் பார்வையைக் குறிப்பிட்டு, டாக்டர் ஜிதேந்திர சிங், இந்தியாவின் வளர்ச்சிப் பாதையானது, ‘அர்த்தஸ்யமூலம் தர்மம்’ என்ற கொள்கையின் வழிகாட்டுதலுடன், பொருளாதார முன்னேற்றத்தை அறநெறி விழுமியங்களுடன் ஒருங்கிணைக்கும் ஒரு நாகரிக நெறியில் வேரூன்றியுள்ளது என்று கூறினார். வேலைவாய்ப்பு மற்றும் பொருளாதார வளர்ச்சி முதல் அறிவியல் தலைமைத்துவம், நிலைத்தன்மை, பாதுகாப்பு மற்றும் உலகளாவிய ஒத்துழைப்பு வரை உள்ள மாநாட்டின் கருப்பொருள்கள், ஒரு விரிவான தேசிய மாற்றத்திற்கான செயல்திட்டத்தைப் பிரதிபலிக்கின்றன என்றும் அவர் குறிப்பிட்டார்.

Leave a Reply