சர்வதேச போதைப்பொருள் கடத்தல் கும்பல்களுக்கு எதிரான அதிரடி நடவடிக்கையாக, சியரா லியோன் நாட்டிலிருந்து புதுடெல்லி வந்த வெளிநாட்டுப் பெண் பயணியிடம் இருந்து பல கோடி ரூபாய் மதிப்பிலான 22 கிலோ கொக்கைன் போதைப்பொருளை வருவாய் புலனாய்வு இயக்குநரகம் பறிமுதல் செய்துள்ளது. விமான நிலையப் பாதுகாப்பைத் தவிர்க்க, ஐக்கிய நாடுகள் சபையின் ‘தூதரக அஞ்சல்’ எனக் குறிப்பிடப்பட்ட பெரிய பெட்டி மற்றும் போலி ஆவணங்களை அப்பயணி பயன்படுத்தியுள்ளார்.
ரகசியத் தகவலின் அடிப்படையில் பெட்டியைச் சோதனையிட்ட அதிகாரிகள், பல அடுக்கு பிளாஸ்டிக் உறைகளில் மறைத்து வைக்கப்பட்டிருந்த 22 கிலோ கொக்கைன் பொட்டலங்களைக் கைப்பற்றினர். 1985-ஆம் ஆண்டின் போதைப்பொருள் தடுப்புச் சட்டத்தின் கீழ் அப்பெண் கைது செய்யப்பட்டு நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டார்.
திவாஹர்
