டெல்லி பல்கலைக்கழகத்துடன் சிசிஆர்ஏஎஸ் – சிஏஆர்ஐ புரிந்துணர்வு ஒப்பந்தம்: மருத்துவத் தாவரப் பன்முகத்தன்மையை ஆவணப்படுத்த நடவடிக்கை .

மத்திய ஆயுர்வேத அறிவியல் ஆராய்ச்சி கவுன்சில் (சிசிஆர்ஏஎஸ்) – மத்திய ஆயுர்வேத ஆராய்ச்சி நிறுவனம் (சிஏஆர்ஐ) மற்றும் டெல்லி பல்கலைக்கழகம் இணைந்து, வடக்கு வளாகத்தில் உள்ள ஆயுர்வேத மருத்துவத் தாவரங்களை ஆவணப்படுத்தும் கூட்டுத் திட்டத்திற்கான புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் நவம்பர் 10, 2026 அன்று கையெழுத்திட்டன.

டெல்லி பல்கலைக்கழகத்தின் 250-300 ஏக்கர் பரப்பளவிலான வடக்கு வளாகத்தில் உள்ள மருத்துவத் தாவரங்களை முறையாக அடையாளம் காண்பதும், பாதுகாப்பதும் இதன் முக்கிய நோக்கமாகும். விரிவான கள ஆய்வுகள், உலர் தாவர மாதிரிகள் தயாரித்தல் மற்றும் தாவரங்களின் விவரங்களை எளிதில் அறிய வளாகம் முழுவதும் கியூஆர்-குறியீடு கொண்ட பெயர்ப்பலகைகளை நிறுவுதல் பணிகள் மேற்கொள்ளப்படும்.

வளாகத்தின் மருத்துவத் தாவரங்களை விளக்கும் வண்ணப் புகைப்படப் புத்தகம் மற்றும் கூட்டு ஆராய்ச்சிக் கட்டுரைகள் வெளியிடப்படவுள்ளன.

Leave a Reply