முன்னாள் தமிழக முதலமைச்சர் கலைஞர் மு.கருணாநிதியின் 2-ஆம் ஆண்டு நினைவு தினம்.

முன்னாள் தமிழக முதலமைச்சர் கலைஞர் மு.கருணாநிதியின் 2-ஆம் ஆண்டு நினைவு தினத்தை முன்னிட்டு, சென்னை மெரினா கடற்கரையில் உள்ள பேரறிஞர் அண்ணா நினைவிடத்திலும், கலைஞர் மு.கருணாநிதி நினைவிடத்திலும், திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் தலைமையில் அஞ்சலி செலுத்தினார்கள்.

மேலும், கோபாலபுரம் மற்றும் சி.ஐ.டி. காலனி இல்லங்கள், முரசொலி அலுவலகம், அண்ணா அறிவாலயம் ஆகிய இடங்களில் கலைஞர் மு.கருணாநிதியின் திருவுருவப்படங்கள் மற்றும் திருவுருவச்சிலைகளுக்கு, திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் தலைமையில் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்கள்.

கலைஞர் மு.கருணாநிதி பிறந்த சொந்த ஊரான திருக்குவளையில் அமைந்துள்ள கலைஞர் மு.கருணாநிதி திருவுருவச்சிலையை, மு.க.ஸ்டாலின் காணொலிக்காட்சி வழியாகத் திறந்துவைத்தார்.

-எஸ்.திவ்யா., ஏ.வி.அனுசுயா.

One Response

  1. MANIMARAN August 8, 2020 2:22 pm

Leave a Reply to MANIMARAN Cancel reply