நோய் பரப்பும் பொதுமக்கள்…!-நியாய விலைக்கடைகளில் குவியும் குடும்ப அட்டைதாரர்கள்.

சேலம் மாவட்டம், ஏற்காடு நியாய விலைக்கடை எண். 2- ல் இரண்டாயிரத்துக்கு அதிகமான நுகர்வோர்கள் உள்ளனர். இந்த கடையில் இன்று மண்ணெண்னை வினியோகிக்கப்பட்டது. அதை வாங்க வந்த குடும்ப அட்டைதாரர்கள், கொரோனா வைரஸ் தொற்று பரவி வருவதை பற்றி சற்றும் கவலைப்படாமல், சமூக இடைவெளி இன்றி கும்பலாக குவிந்து நின்று மண்ணெண்னை வாங்கி சென்றனர்.

இதை கவனித்து மக்களை அறிவுறுத்த வேண்டிய விற்பனையாளரும், அவரது பணியை மட்டுமே கவனித்தார். போலீசாரும் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்படவில்லை. கொரோனா நோய் தொற்று பரவுவது குறையும் வரையாவது நியாய விலைக்கடைகளில் மக்கள் சமூக இடைவெளியை கடைபிடிக்க வேண்டும். அப்போதுதான் கொரோனா நோய் தொற்று பரவுவதைக் கட்டுப்படுத்த முடியும்.

நே.நவீன் குமார்.

One Response

  1. MANIMARAN July 28, 2020 7:11 pm

Leave a Reply to MANIMARAN Cancel reply