தமிழக வழக்கறிஞர்கள் இடை நீக்கம் செய்யப்பட்டது குறித்து, தமிழக பார் கவுன்சில் முறையிட்டதாலும், வழக்கறிஞர்கள் தங்கள் போராட்டத்தை திரும்ப பெற்றதாலும், வழக்கறிஞர்களின் சஸ்பென்ட் உத்தரவை தற்காலிகமாக இந்திய பார் கவுன்சில் நிறுத்தி வைப்பதாக அறிவித்துள்ளது.
மேலும், வழக்கறிஞர்கள் நன்னடத்தை உள்ளிட்ட விவரங்களை வருகின்ற 22-ம் தேதிக்குள் தாக்கல் செய்ய உத்தரவிட்டுள்ள இந்திய பார் கவுன்சில், வழக்கறிஞர்கள் மீதான தடையை முழுவதுமாக நீக்குவது பற்றி வருகின்ற 22-ம் தேதிக்குப் பின் முடிவு எடுக்கப்படும் என தெரிவித்துள்ளது.
-டாக்டர் துரைபெஞ்சமின்.
ullatchithagaval@gmail.com
