அரசு பள்ளியில் திருக்குறள் போட்டி!

cgm 001 CGM 002

திருவண்ணாமலை மாவட்டம், செங்கம் அடுத்த மேல்பென்னாத்தூர் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளியில் இரண்டாம் ஆண்டு திருக்குறள் ஒப்புவித்தல் போட்டி சிறப்பாக நடைபெற்றது.

நிகழ்ச்சிக்கு ஊராட்சி மன்ற தலைவர் மற்றும் கிராம கல்வி குழுத்தலைவருமான காந்தி சின்னகுழந்தை தலைமை தாங்கினார். பெற்றோர் ஆசிரியர் கழகத் தலைவர் கண்ணு பிள்ளை மற்றும் பள்ளி மேலாண்மை குழு தலைவர் மீனா சீஷனுவாசன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். முன்னதாக பள்ளியின் தலைமை ஆசிரியர் இரா.ஜெயந்தி அனைவரையும் வரவேற்றார்.

திருக்குறளின் பெருமை உணர்த்தும் வகையில் பள்ளி மாணவ மாணவியர்களிடத்தில் மொழி சார்ந்த திறன்களை வெளி கொணரும் பொருட்டு  குறள் ஒப்புவித்தல் போட்டி சிறப்பாக நடைபெற்றது.

நிகழ்ச்சிக்கு சிறப்பு  விருந்தினராக பள்ளியின் புரவலர்கள் முபாரக், செல்வம், ஏழுமலை கலந்து கொண்டு சிறப்பாக ஒப்புவித்த மாணவ, மாணவியர்களுக்கு பரிசு வழங்கினார். நிகழ்ச்சியில் பள்ளி ஆசிரியர்கள் சங்கீதா,தனலெட்சுமி, நாரயணன், ஜோதி, அரசு, அமலி ஜெரினா, ரேகா மகேஸ்வரி, சரவணக்குமார், ஆறுமுகம், ராஜா மற்றும் மாணவர்கள் கலந்து கொண்டனர்.

முடிவில் பள்ளி பட்டதாரி ஆசிரியர் சா.வேல்முருகன் நன்றி கூறினார்.

 – செங்கம் சரவணக்குமார்.