இலங்கையில் பத்து பேரில் ஒருவர் மனநிலை பாதிக்கப்பட்டுள்ளதாகவும், அதில் நூற்றுக்கு 20 பேர்தான் சிகிச்சை செய்து வருவதாகவும், இலங்கை சுகாதார அமைச்சர் ராஜித சேனாரத்ன தெரிவித்துள்ளார்.
உலக சுகாதார நிறுவனம் வெளியிட்டுள்ள அறிக்கையின் படி, தற்கொலை செய்து கொள்வோர் வரிசையில் இலங்கை நான்காம் இடத்தில் காணப்படுவதாகவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
மேலும், இலங்கையில் நூற்றுக்கு 50 பேர் மதுபானத்துக்கு அடிமையாகியுள்ளதாகவும், இதுவே மனநிலை பாதிப்பதற்கான காரணம் எனவும், இலங்கை சுகாதார அமைச்சர் ராஜித சேனாரத்ன குறிப்பிட்டுள்ளார்.
அதே சமயம் மனநிலை பாதிப்பு பிரச்சனையை குறைப்பது தொடர்பாக சில நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளதாகவும், அதற்கான சூழலை உருவாக்குவது கட்டாயம் எனவும், இலங்கை சுகாதார அமைச்சர் ராஜித சேனாரத்ன தெரிவித்துள்ளார்.
இலங்கையை பற்றி உலக சுகாதார நிறுவனம் என்ன சொல்கிறது என்பதை இங்கு பார்ப்போம்:
-வினித்.
