மிக்க அவசரம்! கச்சத் தீவு சென்று திரும்பியவர்களை கண்காணித்து “கொரோனா வைரஸ்” அறிகுறி இருந்தால் பரிசோதிக்க வேண்டும்!

கச்சத்தீவு புனித அந்தோணியார் தேவாலயத்தின் வருடாந்திர திருவிழா 07.03.2020 அன்று கச்சத்தீவில் கொண்டாடப்பட்டது. இத்திருவிழாவில் இலங்கை மற்றும் இந்தியாவைச் சேர்ந்த 10,000 பக்தர்கள் கலந்து கொண்டனர்.

இதில் கேரளா மற்றும் தமிழகத்தின் தென் மாவட்டங்களை சேர்ந்த ஏராளமான மக்கள், கச்சத்தீவு புனித அந்தோணியார் தேவாலய திருவிழாவில் கலந்து கொண்டு வீடு திரும்பியுள்ளனர். எனவே, அவர்களின் பெயர் மற்றும் முகவரிப் பட்டியலை சேகரித்து, அவர்களில் யாருக்காவது “கொரோனா வைரஸ்” தொற்று அறிகுறி இருக்கிறதா? என்பதை போர்கால அடிப்படையில் கண்காணிக்க வேண்டும்.

அப்படி யாருக்காவது “கொரோனா வைரஸ்” அறிகுறி இருப்பது தெரியவந்தால் அவர்களையும், அவரை சார்ந்தவர்களையும் தனிமைப்படுத்தி மருத்துவமனையில் அனுமதிக்க வேண்டும்.

இந்த தகவலை இந்திய அரசு, இலங்கை அரசிற்கு தூதரகம் மூலம் வலியுறுத்த வேண்டும்.

ஏனென்றால், அவர்களும் மனிதர்கள் தானே!

–டாக்டர்.துரைபெஞ்சமின்.
ullatchithagaval@gmail.com

 

One Response

  1. MANIMARAN March 30, 2020 11:13 pm

Leave a Reply to MANIMARAN Cancel reply