நீட் யுஜி 2026 தேர்வின் களச் செயல்பாடுகளை ஆய்வு செய்வதற்காக, மத்திய கல்வித்துறை அமைச்சர் திரு தர்மேந்திர பிரதான் தேசிய தேர்வு முகமையின் (NTA) தலைமையகத்தைப் பார்வையிட்டார்.
இந்தப் பயணத்தின் போது, நாடு முழுவதும் தேர்வைச் சீராக நடத்துவதற்காக ஏற்படுத்தப்பட்ட தேர்வு ஏற்பாடுகள், மையங்களுடனான ஒருங்கிணைப்பு மற்றும் கண்காணிப்பு அமைப்புகள் உள்ளிட்ட முக்கிய செயல்பாட்டு அம்சங்களை அமைச்சர் மேற்பார்வையிட்டார். அதிக எண்ணிக்கையிலான தேர்வர்களைக் கையாள்வதற்கும், தேர்வு மையங்களில் ஒழுக்கத்தைப் பேணுவதற்கும் எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் குறித்து அதிகாரிகள் அவருக்கு விளக்கினர்.
நீட் யுஜி 2026 தேர்வானது, தேசிய தேர்வு முகமையால் சுமார் 23 லட்சம் பதிவு செய்த விண்ணப்பதாரர்களுக்கு நடத்தப்படுகிறது. இந்தத் தேர்வு, நாடு முழுவதும் உள்ள மையங்களில் கடுமையான நெறிமுறைகளின் கீழ் நடைபெற்று வருகிறது.
நீட் யுஜி (NEET UG) இந்தியாவில் உள்ள மிகப்பெரிய இளங்கலை நுழைவுத் தேர்வுகளில் ஒன்றாகத் தொடர்ந்து இருந்து வருகிறது. இது நாடு முழுவதும் உள்ள கல்வி நிறுவனங்களில் எம்பிபிஎஸ் (MBBS), பிடிஎஸ் (BDS) மற்றும் பிற தொடர்புடைய மருத்துவப் படிப்புகளில் சேர்வதற்கான நுழைவாயிலாகச் செயல்படுகிறது.
திவாஹர்
