மத்திய சுகாதாரம் மற்றும் குடும்ப நல அமைச்சகம், 2026 மே 4 முதல் 10 வரை அகில இந்திய ‘தீ பாதுகாப்பு வாரத்தை’ அனுசரிக்க உள்ளது.

மத்திய சுகாதாரம் மற்றும் குடும்ப நல அமைச்சகம், அனைத்து மாநிலங்கள்/யூனியன் பிரதேசங்கள் மற்றும் தொடர்புடைய மத்திய அமைச்சகங்கள்/துறைகளுடன் இணைந்து, நாடு முழுவதும் உள்ள சுகாதார நிலையங்களில் தீ விபத்துகளைத் தடுப்பது மற்றும் தணிப்பதன் முக்கியத்துவம் குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்துவதற்காக, 2026 மே 4 முதல் 10 வரை அகில இந்திய ‘தீ பாதுகாப்பு வாரத்தை’ அனுசரிக்கும்.

மத்திய சுகாதாரச் செயலாளர் திருமதி புண்ய சலிலா ஸ்ரீவஸ்தவா அவர்களின் தலைமையில், புது தில்லி, கர்த்தவ்ய பவன்-1 இல் நாளை இந்த அனுசரிப்பு முறைப்படி தொடங்கி வைக்கப்படும். இந்தத் தொடக்க விழாவானது, வாரம் முழுவதும் நாடு தழுவிய அளவில் நடத்தப்படவுள்ள தொடர்ச்சியான விழிப்புணர்வு மற்றும் ஆயத்த நடவடிக்கைகளின் தொடக்கத்தைக் குறிக்கும்.

தொடக்க விழாவின் ஒரு பகுதியாக, சுகாதார நிறுவனங்களில் தீ பாதுகாப்பு விதிமுறைகளைக் கண்டிப்பாகப் பின்பற்றுவதை உறுதி செய்வதற்கும், தயார்நிலையை வலுப்படுத்துவதற்கும், மற்றும் பாதுகாப்புக் கலாச்சாரத்தை வளர்ப்பதற்கும் அனைத்துத் தரப்பினரின் அர்ப்பணிப்பை மீண்டும் உறுதிப்படுத்தும் வகையில், ‘சுகாதார வசதிகளில் தீ பாதுகாப்பு’ குறித்த உறுதிமொழியைச் சுகாதாரச் செயலாளர் வழங்குவார்.

ஒரு வார கால அனுசரிப்பின் போது, மாநிலங்களும் யூனியன் பிரதேசங்களும், சுகாதாரப் பணியாளர்கள் மற்றும் நிர்வாகிகளுக்கு தீ தடுப்பு, அவசரகால மீட்பு மற்றும் வெளியேற்றும் நடைமுறைகள் குறித்து விழிப்புணர்வை ஏற்படுத்தும் நோக்கில், விழிப்புணர்வுப் பிரச்சாரங்கள், மாதிரிப் பயிற்சிகள், திறன் மேம்பாட்டு முயற்சிகள் மற்றும் தீ பாதுகாப்பு நெறிமுறைகளைப் பரப்புதல் உள்ளிட்ட பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொள்ளும்.

வலுவான தீ பாதுகாப்பு வழிமுறைகளை ஊக்குவிப்பதன் மூலமும், சுகாதார சேவை அமைப்பின் அனைத்து மட்டங்களிலும் பாதுகாப்பு மற்றும் தயார்நிலை கலாச்சாரத்தை வளர்ப்பதன் மூலமும், நோயாளிகள், சுகாதாரப் பணியாளர்கள் மற்றும் முக்கிய உள்கட்டமைப்புகளைப் பாதுகாப்பதில் அமைச்சகத்தின் தொடர்ச்சியான அர்ப்பணிப்பை இந்தக் கடைப்பிடிப்பு அடிக்கோடிட்டுக் காட்டுகிறது

Leave a Reply