மிஷன் திருஷ்டி வெற்றிகரமாக ஏவப்பட்டதற்காக, கேலக்ஸிஸ்ஐ நிறுவனத்தின் நிறுவனர்களுக்கும் அதன் முழு குழுவினருக்கும் பிரதமர் திரு நரேந்திர மோடி வாழ்த்து தெரிவித்துள்ளார்.
கேலக்ஸ்ஐ நிறுவனத்தின் ‘திருஷ்டி திட்டம்’ இந்தியாவின் விண்வெளிப் பயணத்தில் ஒரு பெரும் சாதனையாகும் என்று பிரதமர் குறிப்பிட்டார். உலகின் முதல் ஆப்டோசார் செயற்கைக்கோள் மற்றும் இந்தியாவில் தனியாரால் உருவாக்கப்பட்ட மிகப்பெரிய செயற்கைக்கோள் ஆகியவற்றின் வெற்றிகரமான ஏவுதல், புதுமை மற்றும் தேசத்தைக் கட்டியெழுப்புவதில் இளைஞர்களின் ஆர்வத்திற்கு ஒரு சான்றாகும் என்று திரு மோடி எடுத்துரைத்தார். மேலும், கேலக்ஸ்ஐ நிறுவனத்தின் நிறுவனர்களுக்கும் அதன் முழு குழுவினருக்கும் அவர் தனது மனமார்ந்த வாழ்த்துக்களையும் நல்வாழ்த்துக்களையும் தெரிவித்தார்.
பிரதமர் X-இல் பதிவிட்டார்:
கேலக்ஸ்ஐ (GalaxEye) நிறுவனத்தின் ‘திருஷ்டி திட்டம்’ நமது விண்வெளிப் பயணத்தில் ஒரு பெரும் சாதனையாகும். உலகின் முதல் ஆப்டோசார் (OptoSAR) செயற்கைக்கோள் மற்றும் இந்தியாவில் தனியாரால் உருவாக்கப்பட்ட மிகப்பெரிய செயற்கைக்கோள் ஆகியவற்றின் வெற்றிகரமான ஏவுதல், புதுமை மற்றும் தேசத்தைக் கட்டியெழுப்புவதில் நமது இளைஞர்களின் பேரார்வத்திற்கு ஓர் சான்றாக விளங்குகிறது.
கேலக்ஸியின் நிறுவனர்களுக்கும் அதன் முழு குழுவினருக்கும் மனமார்ந்த வாழ்த்துகளும் நல்வாழ்த்துக்களும்.
திவாஹர்
