உலகமே தன் பிள்ளையாய் நினைத்த சுர்ஜித்தின் அழுகுரல் என்னுள் இன்னும் ஒலிக்கிறது!- அமைச்சர் டாக்டர்.சி.விஜயபாஸ்கர் உருக்கம்.

*நான் மட்டுமல்ல இந்த உலகமே தன் பிள்ளையாய் நினைத்த சுர்ஜித்தின் அழுகுரல் என்னுள் இன்னும் ஒலிக்கிறது. என் மனம் வலிக்கிறது.

*எப்படியும் வந்துவிடுவாய் என்றுதான் ஊனின்றி உறக்கமின்றி இரவு பகலாய் இமைமூடாமல் உழைத்தோம். இப்படி எம்மை புலம்பி அழவிடுவாய் என்று எண்ணவில்லை.

*கருவறை இருட்டுபோல் உள்ளே இருப்பாய் என நினைத்தோம். கல்லறை இருட்டாய் மாறும் என்று எண்ணவில்லை.

*மருத்துமனையில் வைத்து உச்சபட்ச மருத்துவம் வழங்க நினைத்து காத்திருந்தேன். இப்போது மார்ச்சுவரியில் பார்க்கும் நிலையில் இதயம் கனத்துக்கிடக்கிறது.

*எண்பத்தைந்து அடி ஆழத்தில் நான் கேட்ட உன் மூச்சுச்சத்தம் தான் என்னை மீட்பு பணியில் ஒரு தந்தை ஸ்தானத்தில் பாச பிணைப்பில் இணைத்து இயங்க வைத்தது.

*மனதை தேற்றி கொள்கிறேன். ஏன் என்றால்
இனி நீ கடவுளின் குழந்தை.

*சோகத்தின் நிழலில் வேதனையின் வலியில்….!

-டாக்டர்.சி.விஜயபாஸ்கர்,

மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர்.

 

One Response

  1. MANIMARAN October 29, 2019 9:52 pm

Leave a Reply to MANIMARAN Cancel reply