டிஜிலாக்கர் ஒருங்கிணைப்பு மூலம் டிஜிட்டல் மாற்றத்தை இந்திய விமானப்படை ஏற்படுத்துகிறது.

இந்திய விமானப்படை இன்று டிஜிட்டல் இந்தியா திட்டத்தின் கீழ் ஒரு முதன்மை முயற்சியான டிஜிலாக்கர் தளத்துடன் ஒருங்கிணைப்பு டிஜிட்டல் பயணத்தைத் தொடங்கியது. விமானப்படை தலைமையகமான  வாயு பவனில் நடைபெற்ற ஒரு நிகழ்ச்சியில், இந்திய விமானப்படை மற்றும் மின்னணு மற்றும் தகவல் தொழில்நுட்ப அமைச்சகம் (MeitY) டிஜிலாக்கரின் பாதுகாப்பான மற்றும் அணுகக்கூடிய ஆவண களஞ்சிய சேவைகளை மேம்படுத்துவதற்கான முக்கியமான புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டன.

இந்த முன்னோடி ஒருங்கிணைப்பு, பணியில் உள்ள மற்றும் ஓய்வு பெற்ற இந்திய விமானப்படை வீரர்களின் முக்கியமான சேவை ஆவணங்கள் வழங்கப்படுவது, அணுகப்படுவது மற்றும் டிஜிட்டல் முறையில் சரிபார்க்கப்படுவதில் புரட்சியை ஏற்படுத்தும். அதிநவீன தொழில்நுட்பத்தின் சக்தியைப் பயன்படுத்துவதன் மூலம், தரவு பாதுகாப்பு, செயல்பாட்டு செயல்திறன் மற்றும் தகவல்களுக்கான தடையற்ற அணுகல் ஆகியவற்றிற்கான தனது உறுதிப்பாட்டை இந்திய விமானப்படை மீண்டும் உறுதிப்படுத்துகிறது.

திவாஹர்

Leave a Reply