மழை தொடர்ந்து நீடித்தால் மண் சரிவு ஏற்படும்; பொதுமக்களுக்கு இலங்கை அரசாங்கம் எச்சரிக்கை!

Colombo Flood Map LatLong_ver1 1

இலங்கையில் மண் சரிவு ஏற்படும் மாவட்டங்களும்; வெள்ளம் பாதித்த  பகுதிகளும்!- முழு விபரம். -என்.வசந்த ராகவன்.

Updated: May 29, 2017 10:40 pm — 10:40 pm

பிரதமர் நரேந்திர மோதிக்கு ஜெர்மனியில் சிறப்பான வரவேற்பு!

?????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????

அரசு முறை பயணமாக ஜெர்மனி சென்றுள்ள பிரதமர் நரேந்திர மோதிக்கு பேர்லினில் விமான நிலையத்தில்  சிறப்பான வரவேற்பு அளிக்கப்பட்டது. -எஸ்.சதிஸ்சர்மா.  

Updated: May 29, 2017 9:34 pm — 9:34 pm

இலங்கையில் கனமழை, காற்று, வெள்ளப்பெருக்கு, நிலச்சரிவால் இதுவரை 146 நபர்கள் உயிரிழந்துள்ளனர்!-வீடியோ.

sl flood

இலங்கையில் பெய்த கனமழையின் காரணமாகவும், சீரற்ற காலநிலையாலும், இலங்கையின் மேற்கு மற்றும் தெற்கு மாகாணங்களில் வெள்ளப்பெருக்கு மற்றும் நிலச்சரிவு ஏற்பட்டுள்ளது. இதனால் மக்களின் இயல்பு வாழ்க்கை பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளது. இதுவரை 146 நபர்கள் உயிரிழந்துள்ளனர். 52 பேர் காயமடைந்துள்ளனர் மற்றும் 112 நபர்கள் காணாமல் போய் உள்ளனர். கனமழை, காற்று, வெள்ளப்பெருக்கு, நிலச்சரிவு இவற்றால் 1,14,124 குடும்பங்களில் 4,42,299 நபர்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். 230 வீடுகள் முழுமையாகவும், 1,701 வீடுகள் பாதியளவும் சேதமடைந்துள்ளன. 319 இடங்களில் 24,603 குடும்பங்களை […]

Updated: May 28, 2017 2:45 pm — 2:45 pm

இந்தியாவின் முதல் பிரதமர் ஜவஹர்லால் நேருவின் 53-வது ஆண்டு நினைவு தினம்.

???????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????

இந்தியாவின் முதல் பிரதமர் பண்டிட் ஜவஹர்லால் நேருவின் 53-வது ஆண்டு நினைவு தினத்தை முன்னிட்டு, டெல்லியில் உள்ள அவரது நினைவிடத்தில் இந்திய குடியரசு தலைவர் பிரணாப் முகர்ஜி, துணை குடியரசு தலைவர் ஹமீத் அன்சாரி ஆகியோர் மலர் தூவி அஞ்சலி செலுத்தினர். -எஸ்.சதிஸ் சர்மா.

Updated: May 27, 2017 3:22 pm — 3:22 pm

வெள்ளம் மற்றும் நிலச்சரிவால் பாதிக்கப்பட்ட இலங்கை மக்களுக்கு இந்திய பிரதமர் நரேந்திர மோதி ஆறுதல்!- நிவாரணப் பொருட்களை ஏற்றிக்கொண்டு 2 இந்திய  கப்பல் இலங்கை நோக்கி விரைந்துள்ளது.

indian-navy

இலங்கையில் பெய்த கனமழையின் காரணமாகவும், சீரற்ற கால நிலையாலும், இலங்கையின் மேற்கு மற்றும் தெற்கு மாகாணங்களில்  வெள்ளம் மற்றும் நிலச்சரிவு ஏற்பட்டுள்ளது. இதனால் மக்களின் இயல்பு வாழ்க்கை பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளது. இதுக்குறித்து நமது “உள்ளாட்சித்தகவல்” இணைய ஊடகத்தில் நேற்று (26.05.2017) இரவு புகைப்பட ஆதாரத்துடன் செய்தி வெளியிட்டு இருந்தோம். இந்நிலையில், வெள்ளம் மற்றும் நிலச்சரிவால் பாதிக்கப்பட்ட இலங்கை மக்களுக்கு இந்திய பிரதமர் நரேந்திர மோதி ஆறுதல் கூறியுள்ளார். இயற்கை சீற்றத்தால் உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு தனது ஆழ்ந்த இரங்கலையும் தெரிவித்துள்ளார். மேலும், இந்திய பிரதமர் நரேந்திர மோதி உத்தரவின் பேரில், வெள்ளம் […]

Updated: May 27, 2017 2:39 pm — 2:39 pm

தூத்துக்குடி பெரியசாமி மறைவு பேரதிர்ச்சியை தந்திருக்கிறது; முரட்டுப் பக்தனுக்கு மு.க.ஸ்டாலின் அஞ்சலி!

psdeathmks1

திராவிட முன்னேற்றக் கழகத்தின் தூத்துக்குடி தெற்கு மாவட்ட செயலாளர் பெரியசாமி மறைவிற்கு, தி.மு.க. செயல் தலைவர் மு.க.ஸ்டாலின் நேரில் அஞ்சலி செலுத்தினார். பெரியசாமி மறைவு தனக்கு பேரதிர்ச்சியை தந்திருப்பதாக மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார். -எஸ்.திவ்யா.

Updated: May 27, 2017 12:28 pm — 12:28 pm

இலங்கையின் மேற்கு மற்றும் தெற்கு மாகாணங்களில் வெள்ளப்பெருக்கு!- 25 பேர் பலி; 42 நபர்கள் காணாமல் போய் உள்ளனர்.

sl flood1

இலங்கையில் பெய்த கனமழையின் காரணமாகவும், சீரற்ற கால நிலையாலும் இலங்கையின் மேற்கு மற்றும் தெற்கு மாகாணங்களில் பெருமளவில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. இதனால் மக்களின் இயல்பு வாழ்க்கை பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளது. வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களை மீட்பதற்காக இலங்கை தெற்கு மாகாணத்தில் 13 கடற்படை நிவாரண குழுக்களும், மேற்கு மாகாணத்தில் 18 கடற்படை நிவாரண குழுக்களும் ஈடுபட்டு வருகின்றனர். 31 டிங்கி படகுகளுடன், 197 கடற்படை வீரர்கள் கம்புருபிட்டிய, நெலுவ, இமதுவ, வந்துரம்ப பிட்டெபத்தர, அக்குரஸ்ஸ, மாத்தறை, தெய்யந்தர, ஹெனகடுவ, ஹங்காமா, […]

Updated: May 26, 2017 8:54 pm — 8:54 pm

அசாம் சென்ற பிரதமர் நரேந்திர மோதிக்கு சிறப்பான வரவேற்பு!

?????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????

இன்று (மே-26)  காலை அசாம் மாநிலம், திப்ருகார் சென்ற பிரதமர் நரேந்திர மோதிக்கு, விமான நிலையத்தில்  சிறப்பான வரவேற்பளிக்கப்பட்டது. அசாம் ஆளுநர் ஸ்ரீ பானர்வைலால் புரோகித் மற்றும் அசாம் முதலமைச்சர் ஸ்ரீ சர்பானந்த சோனுவால் ஆகியோர் மலர் கொத்து கொடுத்து வரவேற்றனர்.  -எஸ்.சதிஸ்சர்மா.

Updated: May 26, 2017 2:00 pm — 2:00 pm
ullatchithagaval © 2014