ராணுவ மருத்துவக் கல்லூரியின் 58-வது தொகுப்பின் பயிற்சி நிறைவு அணிவகுப்பு புனேயில் நடைபெற்றது .

புனேயில் உள்ள ராணுவ மருத்துவக் கல்லூரியின் 58-வது தொகுப்பைச் சேர்ந்த நூற்று பன்னிரண்டு மருத்துவ பட்டதாரிகள் இன்று (25.04.2024) கேப்டன் தேவாஷிஷ் சர்மா கீர்த்தி சக்ரா அணிவகுப்பு மைதானத்தில் பயிற்சி நிறைவு அணிவகுப்பில் பங்கேற்று, ராணுவத்தில் நியமிக்கப்பட்டனர்.

இந்த விழாவில் சிறப்பு விருந்தினராக ராணுவ மருத்துவ சேவைகள் தலைமை இயக்குநர் மற்றும் ராணுவ மருத்துவப் பிரிவின் மூத்த கர்னல் கமாண்டன்ட் லெப்டினன்ட் ஜெனரல் தல்ஜித் சிங் கலந்து கொண்டார். மருத்துவப் பிரிவின் லெப்டினன்ட் சுஷில் குமார் சிங் அணிவகுப்பைப் பார்வையிட்டார்.

புதிதாக நியமிக்கப்பட்ட மருத்துவ அதிகாரிகளுக்கு தலைமை இயக்குநர் வாழ்த்துத் தெரிவித்தார்.

ராணுவ மருத்துவக் கல்லூரியின் 58-வது தொகுப்பில் சிறப்பாக செயல்பட்ட, நட்பு நாடுகளைச் சேர்ந்த ஐந்து பேர் உட்பட மொத்தம் 147 பேர் பட்டம் பெற்றனர். ராணுவ மருத்துவ சேவைகளில் நியமிக்கப்பட்ட 112 பேரில், 87 பேர் ஆண்கள், 25 பேர் பெண்கள்.

இந்த நிகழ்ச்சியில் மூத்த அதிகாரிகள், முன்னாள் படை வீரர்கள், ஆசிரியர்கள், ராணுவ மருத்துவ மற்றும் செவிலியர் பிரிவினர், பெற்றோர் மற்றும் நியமிக்கப்பட்ட மருத்துவ அதிகாரிகளின் குடும்பத்தினர் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

எம்.பிரபாகரன்

Leave a Reply