அறிவியல் மற்றும் தொழில்துறை ஆராய்ச்சி கவுன்சில், மேம்பட்ட பொருட்கள் மற்றும் செயல்முறைகள் ஆராய்ச்சி நிறுவனம் ஆகியவை அறிவு மற்றும் விழிப்புணர்வு மேப்பிங் தளத்துடன் இணைந்து 250-க்கும் அதிகமான மாணவர்களுக்கு அறிவியல் பயணத்தை நடத்தின .

அறிவியல் மற்றும் தொழில்துறை ஆராய்ச்சி கவுன்சில், மேம்பட்ட பொருட்கள் மற்றும் செயல்முறைகள் ஆராய்ச்சி நிறுவனம் ஆகியவை அறிவு மற்றும் விழிப்புணர்வு மேப்பிங் தளத்துடன் இணைந்து, 2024, ஏப்ரல் 29 அன்று மத்தியப் பிரதேசத்தின் போபாலில் 250-க்கும் அதிகமான மாணவர்களுக்கு அறிவியல் பயணத்தை நடத்தின.

இந்தப் பயணம் மாணவர்களுக்கு அறிவியல், தொழில்நுட்பம் மற்றும் கண்டுபிடிப்பு உலகத்தை ஆராய ஒரு தனித்துவமான வாய்ப்பை வழங்கியது. இது மாணவர்களிடையே அறிவியல் ஆய்வு மற்றும் கண்டுபிடிப்புக்கான ஆர்வத்தைத் தூண்டுவதை நோக்கமாகக் கொண்டது.

அறிவியல் மற்றும் தொழில்துறை ஆராய்ச்சி கவுன்சில், தேசிய அறிவியல் தொடர்பு மற்றும் கொள்கை ஆராய்ச்சி நிறுவனம் ஆகியவற்றின் தொழில்துறை கூட்டாளியான நீசா கம்யூனிகேஷன்ஸ் பிரைவேட் லிமிடெட், அறிவுசார் கூட்டாளியான அறிவு மற்றும் விழிப்புணர்வு மேப்பிங் தளம் ஆகியவற்றுக்கு இடையேயான முன்முயற்சி, அறிவியல் கருத்துக்களை ஆராய்வதற்கும் ஈடுபடுவதற்கும், முழுமையான புரிதலை வளர்ப்பதற்கும் மாணவர்களுக்கு ஒரு தளத்தை வழங்குவதுடன், அவர்களின் அறிவியல் ஆர்வத்தைத் தூண்டுகின்றன.

திவாஹர்

Leave a Reply