இதயத்தைத் தேடி…

book, inspiration, emotional, life line

Read it on Amazon:

 

          இதயத்தைத் தேடி …

ஆற்றுப் பெருகற்று

அடிச்சூடும் மண்ணாலும் அவ்வாறே

ஊற்றுப் பெருக்கால் உலகூட்டும் –ஏற்றவருக்கு

நல்லகுடி பிறந்தாலும்

நற்கூர்ந்து ஆனாலும்

இல்லையென மாட்டார் இசைந்து

என்ற ஒளவையின் தர்மநெறிக்கு ஏற்ப வாழ்ந்துக்

கொண்டிருக்கின்றச்

சான்றோர்களே…!

 

உள்ள வழக்கு இருக்க

ஊரார் பொது இருக்க

தள்ளி வழக்குதனை தான் பேசி

எள்ளளவு கைக்கூலி தான் வாங்கும்

காள் அருவன் தன் கிளையும் எச்சம்

அறம் என்றால் அறும்

என்ற ஒளவையின் நீதி நெறியை மனதில் நிறுத்தி

வாழ்ந்து கொண்டிருக்கின்ற அறிஞர் பெருமக்களே…!

 

பேரன்புமிக்க பெரியோர்களே!

பெருமதிப்பிற்குரிய தாய்மார்களே!

எண்ணங்களை எழுத்துக்களாக்கி

எழுத்துக்களை கருத்துக்களாக்கி

கருத்துக்களைக் கவிதைகளாக்கி

கவிதைக்களைக்  காவியத்திற்க்கு

அர்ப்பணித்துக் கொண்டிருக்கும் எண்ணருமை

கவிஞர் பெருமக்களே!

 

அறிவைக் கண்ணைத் திறந்து வைக்கும்

ஆசிரியர் பெருமக்களே!

 

இந்தியாவின் எதிர்காலத்தை

இமயமாய் உயர்த்திட

எத்தனித்துக் கொண்டிருக்கும்,  மலைக்குலைந்தாலும்

நிலை குலையாத என்னருமை

இளைஞர் பெருமக்களே…!

 

என் உயிரினும் மேலான என் இனிய

தமிழ் மக்களே…

உங்கள் அத்துணைப்  பேர்களுக்கும், என் முத்தான

அன்பு வணக்கத்தை

 

முதற் கண்  தெரிவித்துக் கொள்கிறேன் !

 

கண்ணி வெடிகளுக்கு நடுவிலே ….

கருணையைத் தேடுகின்றோம்!

 

மனித வெடிகுண்டுகளுக்கு மத்தியிலே…

மனித நேயத்தைத்  தேடுகின்றோம்!

 

பிணக்குவியல்களுக்கு மத்தியிலே

உயிர்ப்பைத் தேடுகின்றோம்!

 

யூதாஸ்கள் வாழும் உலகில்…

இயேசுவை தேடுகின்றோம்!

 

பின்லேடன் கூட்டத்திலே…

நபிகள் நாயகத்தைத் தேடுகின்றோம்!

 

கோட்சேக்களுக்கு மத்தியிலே…

காந்தியைத் தேடுகின்றோம்!

 

எட்டப்பன் பரம்பரையில்…

கட்டபொம்மனைத் தேடுகின்றோம்!

 

அரசியல்வாதிகளிடம்…

தியாகத்தைத் தேடுகின்றோம்!

 

திருடர்கள் மத்தியிலே….

அகிம்சையைத் தேடுகின்றோம்!

 

ஊழல் மலிந்த உலகில்….

உண்மையைத் தேடுகின்றோம்!

 

ஊதாரிகள் நிறைந்த உலகில்…

உழைப்பாளிகளைத் தேடுகின்றோம்!

 

பாவிகள் நிறைந்த பாரினில்…

பாசத்தைத் தேடுகின்றோம்!

 

துன்பத்திற்கு நடுவிலே…

இன்பத்தைத் தேடுகின்றோம்!

 

துரோகத்திற்கு மத்தியிலே…

நம்பிக்கையைத் தேடுகின்றோம்!

 

அநீதிகளுக்கு மத்தியிலே…

தர்மத்தை தேடுகின்றோம்!

 

செல்வத்தை தேடி திரிகின்ற உலகில்…

இதயத்தைத் தேடுகின்றோம்!

 

இன்றே கிடைத்துவிடும் என்ற எதிர்பார்ப்பில் அல்ல!

என்றாவது ஒரு நாள் கிடைத்தே தீரும் என்ற நம்பிக்கையில்…!

தொடர்ச்சி….

-டாக்டர். துரைபெஞ்சமின்

 

மருத்துவ நுழைவுத் தேர்விற்காக (NEET) தமிழகத்தில் வெளிவரும் முதல் (தமிழ் & ஆங்கிலம்) வினா-விடை புத்தகம்.

2 Comments

  1. Guna February 13, 2018 11:40 pm
  2. Jose February 15, 2018 8:59 pm

Leave a Reply