குஜராத்தின் கிப்ட் சிட்டியில் துணை நிறுவனத்தை அமைக்க ஆர்இசி ரிசர்வ் வங்கியின் ஒப்புதலைப் பெற்றுள்ளது.

மின்சார அமைச்சகத்தின் கீழ் இயங்கும்  மகாரத்னா மத்திய பொதுத்துறை நிறுவனமும், முன்னணி வங்கி அல்லாத நிதி நிறுவனமுமான கிராமப்புற மின்மயமாக்கல் கழகம் ஆர்இசி , குஜராத், காந்திநகர், குஜராத் இன்டர்நேஷனல் ஃபைனான்ஸ் டெக்-சிட்டியில் (“GIFT”), சர்வதேச நிதிச் சேவை மையத்தில் முழுமையாக சொந்தமான துணை நிறுவனத்தை அமைப்பதற்காக இந்திய ரிசர்வ் வங்கியிடமிருந்து ‘தடையில்லா சான்றிதழை’ (மே 3, 2024 தேதியிட்டது) பெற்றுள்ளது.

இந்தியாவில் நிதிச் சேவைகளுக்கான வளர்ந்து வரும் மையமான கிப்ட் சிட்டியில் செயல்பாடுகளை விரிவுபடுத்துவதற்கான முடிவு, ஆர்இசி  தனது தொழில்திட்டத்தை தொடர்ந்து பல்வகைப்படுத்துவதாலும், வளர்ச்சிக்கான புதிய வழிகளை ஆராய்வதாலும் வருகிறது. முன்மொழியப்பட்ட துணை நிறுவனம் கிப்ட் சிட்டிக்குள்  ஒரு நிதி நிறுவனமாக கடன் வழங்குதல், முதலீடு மற்றும் பிற நிதி சேவைகள் உட்பட பல்வேறு நிதி நடவடிக்கைகளில் ஈடுபடும்.

இந்த வளர்ச்சி குறித்து பேசிய ஆர்இசி தலைவர் மற்றும் மேலாண்மை இயக்குநர் திரு விவேக் குமார் தேவாங்கன், ”  கிப்ட் சிட்டி தளம் உலகத் தரம் வாய்ந்த உள்கட்டமைப்புடன் இணைந்து, சர்வதேச கடன் நடவடிக்கைகளுக்கு உகந்த சூழலை வழங்குகிறது. உலக சந்தையில் தனக்கென ஒரு இடத்தை செதுக்க ஆர்இசி இந்த நன்மைகளைப் பயன்படுத்தும் என்று நாங்கள் நம்புகிறோம். கிப்ட் சிட்டியில் உள்ள நிறுவனம் ஆர்இசி-க்கு புதிய வணிக வாய்ப்புகளை வழங்குவதோடு மட்டுமல்லாமல், நாட்டின் எரிசக்தித் துறையின் வளர்ச்சிக்கும் குறிப்பிடத்தக்க பங்களிப்பை வழங்கும். உலக அரங்கில் எங்கள் தடத்தை விரிவுபடுத்தும் அதே வேளையில், இந்தியாவின் மின்சாரம் மற்றும் உள்கட்டமைப்புத் துறையில் வளர்ச்சியை ஊக்குவிப்பதற்கான ஆர்.இ.சி.யின் நோக்கத்தை மேலும் முன்னெடுத்துச் செல்ல இந்த உத்திபூர்வ நகர்வை மேம்படுத்த நாங்கள் எதிர்நோக்குகிறோம்’’  என்று கூறினார்.

எஸ்.சதிஸ் சர்மா

Leave a Reply