தமிழக அரசின் தலைமை வழக்கறிஞர் சண்முகசுந்தரம் ராஜினாமா!-இது வழக்கமான நடைமுறைதான்!

வழக்கறிஞர் சண்முகசுந்தரம்.

தமிழக அரசின் தலைமை வழக்கறிஞர் சண்முகசுந்தரம் தனது பதவியை ராஜினாமா செய்துள்ளார்.

கடந்த 2021-ல் தேர்தல் முடிவுகள் வெளியானதும், தமிழக அரசின் அப்போதைய தலைமை வழக்கறிஞர் விஜயநாராயணன் தனது பதவியை ராஜினாமா செய்தார். இதையடுத்து, தமிழக அரசின் புதிய தலைமை வழக்கறிஞராக சண்முகசுந்தரம் நியமிக்கப்பட்டு இதற்கான உத்தரவை அப்போதைய தமிழக ஆளுநர் பன்வாரிலால் புரோகித் பிறப்பித்தார்.

இந்நிலையில், தமிழக தலைமை வழக்கறிஞர் பதவியை சண்முகசுந்தரம் ராஜினாமா செய்துள்ளார். தலைமை வழக்கறிஞர் மீது அரசுக்கும், ஆளுங்கட்சி தலைமைக்கும் அதிருப்தி இருந்தாலும் (அல்லது) தலைமை அரசு வழக்கறிஞருக்கு ஆட்சியின் மீதும், ஆளும் கட்சி தலைமை மீதும் அதிருப்தி இருந்தாலும் இதுபோன்று நடப்பது வழக்கமான நடைமுறைதான். இதனால் தமிழ்நாட்டில் எந்த குடியும் மூழ்கி விடாது. இதை பெரிதுபடுத்த வேண்டிய அவசியமும் இல்லை. அச்சு மற்றும் காட்சி ஊடகங்களுக்கு வேண்டுமானால் இது அடுத்த 48 மணி நேரத்திற்கு பொழுதை ஓட்டுவதற்கு பயன்படுமே தவிர வேறு எதற்கும் பயன்படாது.

Dr.துரைபெஞ்சமின், BAMS.,
M.A.,SOCIOLOGY,
Ex. Honorary A.W.Officer, Govt Of India,
Editor & Publisher,
www.ullatchithagaval.com
Director, UTL MEDIA OPC PVT LTD,
Mobile No.98424 14040

Leave a Reply