மத்திய அரசு ரூ.17,000 கோடி ஜிஎஸ்டி இழப்பீட்டுத் தொகையை மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களுக்கு விடுவித்துள்ளது.

2022 ஏப்ரல் முதல் ஜூன் வரையிலான காலத்திற்கு ஜிஎஸ்டி இழப்பீட்டுத் தொகையாக, மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களுக்கு, ரூ.17,000 கோடியை, மத்திய அரசு 24.11.2022 அன்று விடுவித்தது.  மேற்குறிப்பிட்ட தொகை உட்பட 2022-23-ஆம் ஆண்டில் இதுவரை மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களுக்கு மொத்த இழப்பீட்டுத் தொகையாக ரூ.1,15,662 கோடி விடுவிக்கப்பட்டுள்ளது.

இதில் தமிழ்நாட்டிற்கு ரூ.1,188 கோடியும், புதுச்சேரிக்கு ரூ.73 கோடியும் விடுவிக்கப்பட்டுள்ளது.

2022 அக்டோபர் வரை மொத்த வரிவசூல் ரூ.72,147 கோடி மட்டுமே என்றாலும் கூட, எஞ்சிய தொகையான ரூ.43,515 கோடியை மத்திய அரசு தனது சொந்த நிதி ஆதாரங்களிலிருந்து விடுவித்துள்ளது. இந்த ஆண்டு மார்ச் மாத இறுதிவரை வசூலாகும் என்று மதிப்பிடப்பட்டுள்ள மொத்த வரியின் மாநிலங்களுக்கான இழப்பீட்டுத் தொகை முன்கூட்டியே விடுவிக்கப்பட்டுள்ளது. இந்த நிதியாண்டில் மாநிலங்கள், தங்களின் திட்டங்களை குறிப்பாக மூலதனச் செலவுகளை  உறுதி செய்ய உதவும் வகையில் இந்த முடிவு எடுக்கப்பட்டது.

எஸ்.சதிஸ் சர்மா

Leave a Reply