சி.ஓ.பி 27 மாநாட்டில் லைஃப் இயக்கத்தைப் பறைசாற்றிய இந்திய அரங்கு.

நவம்பர் 6 முதல் 17 வரை எகிப்து நாட்டின் ஷர்ம் எல் ஷேக்-இல் நடைபெற்ற ஐ.நா பருவநிலை (சி.ஓ.பி 27) மாநாட்டில் சுற்றுச்சூழலுக்கு ஏற்ற வாழ்க்கை முறை-லைஃப் என்ற கருப்பொருளில் இந்திய அரங்கு அமைக்கப்பட்டிருந்தது. ஒலி- ஒளி, இலச்சினை, முப்பரிமான மாதிரிகள், நிகழ்ச்சிகள் போன்றவை வாயிலாக லைஃப் குறித்த செய்தியை எடுத்துரைக்கும் வகையில் இந்த அரங்கு வடிவமைக்கப்பட்டிருந்தது.

மத்திய அரசின் அமைச்சகங்கள், மாநில அரசுகள், பொதுத்துறை நிறுவனங்கள், தன்னாட்சி நிறுவனங்கள், துணை நிறுவனங்கள் மற்றும் ஐக்கிய நாடுகளின் அமைப்புகள் போன்றவை பல்வேறு நிகழ்ச்சிகளை நடத்தின. இந்திய அரங்கில் நடத்தப்பட்ட 49 நிகழ்ச்சிகளில் 16 நிகழ்ச்சிகளை மத்திய அரசும், 10 நிகழ்ச்சிகளை மாநில அரசும், 23 நிகழ்ச்சிகளை தனியார் துறையும் நடத்தின.

நவம்பர் 6-ஆம் தேதி மத்திய சுற்றுச்சூழல், வனம் மற்றும் பருவநிலை மாற்ற அமைச்சரால் தொடங்கப்பட்ட இந்த அரங்கில் இளம் சாதனையாளர்களுக்கான விருதுகள் வழங்கப்பட்டன. நவம்பர் 14-ஆம் தேதி இந்தியாவின் குறைவான கரியமில வெளியீட்டு மேம்பாட்டிற்கான நீண்டகால உத்தியை இந்திய அரங்கில் மத்திய சுற்றுச்சூழல், வனம் மற்றும் பருவநிலை மாற்ற அமைச்சர் திரு புபேந்தர் யாதவ் வெளியிட்டார். சுமார் 25000 பேர் இந்திய அரங்கில் பங்கேற்றனர். பருவநிலை மாற்றத்தை எதிர்கொள்வதற்கு இந்தியா மேற்கொண்டு வரும் முயற்சிகள் நவீன தொழில்நுட்பங்கள் வாயிலாக பார்வையாளர்களுக்கு எடுத்துரைக்கப்பட்டன.

எம்.பிரபாகரன்

Leave a Reply