தூய்மையான கங்கைக்கான தேசிய இயக்கம் கங்கா உத்சவ் என்னும் ஆற்று திருவிழாவுக்கு ஏற்பாடு.

தூய்மையான கங்கைக்கான தேசிய இயக்கம் கங்கா உத்சவ் என்னும்ஆற்று திருவிழாவை நவம்பர் 4 அன்று புது தில்லியில் இரண்டு அமர்வுகளில் ஏற்பாடு செய்தது. ஜல் சக்தி மற்றும் பழங்குடியினர் விவகாரங்களுக்கான இணையமைச்சர் திரு பிஷ்வேஸ்வர் துடுவின் முன்னிலையில், காலை அமர்வில், மத்திய கலாச்சாரம், சுற்றுலா துறை அமைச்சர் திரு கிஷன் ரெட்டி சிறப்பு விருந்தினராகக் கலந்து கொண்டார்.

மாலை அமர்வுக்கு மத்திய ஜல் சக்தி அமைச்சர் திரு கஜேந்திர சிங் ஷெகாவத் தலைமை தாங்கினார். செப்டம்பர் 26, 2021 அன்று பிரதமர் திரு நரேந்திர மோடியின் உரையின் அடிப்படையில் இந்த விழா கொண்டாடப்படுகிறது. கங்கா உத்சவ் 2022-ன் மைய நோக்கம் இந்தியாவின் அனைத்து நதிகளையும் கொண்டாடுவதே ஆகும். 2008 ஆம் ஆண்டு கங்கை நதி இந்தியாவின் தேசிய நதியாக அறிவிக்கப்பட்ட நாளான நவம்பர் 4 ஆம் தேதி, 2017 ஆம் ஆண்டு முதல் ஒவ்வொரு ஆண்டும் கங்கா உத்சவ் விழா கொண்டாடப்பட்டு  வருகிறது.

கங்கா உத்சவ் 2022 விடுதலையின் அமிர்தப் பெருவிழாவுக்காக  அர்ப்பணிக்கப்பட்டுள்ளது

கங்கை ஓடும் மாநிலங்களில் 75 க்கும் மேற்பட்ட நிகழ்வுகள் ஏற்பாடு செய்யப்படும். இதில் உள்ளூர் கலாச்சாரம் ஊக்குவிக்கப்படும். கங்கை நதிக்கரையில் விழிப்புணர்வு மற்றும் வேலை வாய்ப்புகளை உருவாக்கும் நடவடிக்கைகள் ஏற்பாடு செய்யப்படும்.

திவாஹர்

Leave a Reply