அமித்ஷாவின் இந்தி வெறி பேச்சைக் கண்டித்து மதிமுக ஆர்ப்பாட்டம்!- மதிமுக பொதுச்செயலாளர் வைகோ தகவல்.

மறுமலர்ச்சி தி.மு.கழகத்தின் சிறுபான்மைப் பிரிவுச் செயலாளர் முராத் புகாரி அவர்களின் மறைவு காரணமாக ஒத்தி வைக்கப்பட்ட, இந்தி எதிர்ப்பு கண்டன ஆர்ப்பாட்டம், மீண்டும் 06.10.2022 அன்று மாலை நடைபெற உள்ளது.

அமித்ஷாவின் இந்தி வெறி பேச்சுக்கு – போக்குக்கு கண்டனம் தெரிவிக்கவும், அரசமைப்புச் சட்டத்தின் 8ஆவது அட்டவணையில் உள்ள 22 மொழிகளையும் இந்திக்கு இணையான ஒன்றிய அரசின் அலுவல் மொழியாக அறிவிக்க வேண்டும் என்று வலியுறுத்தியும், சென்னை வள்ளுவர் கோட்டம் அருகில் 06.10.2022 வியாழக்கிழமை மாலை 4 மணிக்கு என்னுடைய தலைமையில் நடைபெற உள்ள ஆர்ப்பாட்டத்தில் கலந்துகொள்ளுமாறு தமிழ் உணர்வாளர்களையும், கழகத் தோழர்களையும் அன்புடன் அழைக்கிறேன்.

இவ்வாறு மதிமுக பொதுச்செயலாளர் வைகோ தமது அறிக்கையில் குறிப்பிட்டுள்ளார்.

-சி.கார்த்திகேயன்.

Leave a Reply