திருச்சி தேசிய கல்லூரியில் ‘கல்கியின் வரலாற்று நாவல்கள்’ குறித்து வைகோ உணர்ச்சிமயமான எழுச்சியுரை ஆற்றினார்!

திருச்சி தேசிய கல்லூரி நூற்றாண்டு விழாவை முன்னிட்டு, கல்கி. ரா.கிருஷ்ணமூர்த்தி அறக்கட்டளையின் சார்பில் இலக்கிய சொற்பொழிவு இன்று காலை 11.15 மணியளவில் தமிழ்த்தாய் வாழ்த்துடன் கல்லூரி அரங்கில் தொடங்கியது.

இவ்விழாவில் மதிமுக பொதுச்செயலாளரும், தழிழறிஞருமான வைகோ சிறப்பு விருந்தினராக கலந்துக் கொண்டு “கல்கியின் படைப்புகள்” என்னும் தலைப்பில் உணர்ச்சிமயமான எழுச்சியுரை ஆற்றினர்.

கையில் எந்த குறிப்புகளும் இல்லாமல், இரண்டு மணி நேரங்களுக்கும் மேலாக, தங்கு தடையின்றி ‘கல்கியின் வரலாற்று நாவல்கள்’ குறித்து வைகோ உரையாற்றியது, அரங்கத்தில் வீற்றிருந்த அனைவரையும் ஆச்சர்யத்தில் ஆழ்த்தியது. வைகோவின் வாசிப்பின் திறனையும், நினைவாற்றலையும் கண்டு உண்மையிலுமே வியந்துப்போனார்கள்.

மேலும், கல்கி கிருஷ்ணமூர்த்தி மகள் திருமண விழாவிற்கு வந்த தந்தை பெரியார், திருநீறு மற்றும் குங்குமத்தை எடுத்து மணமக்களின் நெற்றியில் இட்டு வாழ்த்தியதோடு, கல்கி கிருஷ்ணமூர்த்தியின் நெற்றியிலும் இட்டார். தந்தை பெரியார், தான் நாத்திகராக, கடவுள் மறுப்பு கொள்கையில் தீவிரமாக இருந்தாலும், நட்புக்காக மற்றவர்களின் உணர்வுகளையும், நம்பிக்கையையும், மதிக்கக் கூடியவராக எப்போதுமே இருந்தார் என்பதற்கு இச்சம்பவம் மிக சிறந்த எடுத்துக்காட்டு என்று வைகோ கூறியபோது, இத்தகவலை கேட்டு அரங்கத்தில் இருந்த பார்வையாளர்கள் அனைவரும் ஆச்சர்யப்பட்டனர்.

வைகோ ஒரு வேளை அரசியலுக்கு வராமல், எழுத்து மற்றும் இலக்கியத்துறையில் மட்டும் நீடித்திருந்தால், உலக இலக்கிய வரலாற்றில் ஒரு உன்னதமான இடத்தை நிச்சயம் பிடித்திருப்பார்.

-டாக்டர்.துரைபெஞ்சமின்.
ullatchithagaval@gmail.com

முக்கிய குறிப்பு: “கல்கியின் படைப்புகள்” குறித்து இன்று திருச்சி தேசிய கல்லூரியில் வைகோ ஆற்றிய உரையின் முழுமையான வீடியோ தொகுப்பு, விரைவில் நமது “உள்ளாட்சித் தகவல்” ஊடகத்தில் பதிவேற்றம் செய்யப்படும் என்பதை, நமது வாசகர்களுக்கு இதன் மூலம் தெரிவித்துகொள்கின்றோம்.

-டாக்டர்.துரைபெஞ்சமின்.

Leave a Reply