திருச்சி திருவெறும்பூர் அருகே மணல் கடத்தல் தடுப்பு விழிப்புணர்வு பேரணி!

திருச்சி மாவட்ட ஆட்சித் தலைவர் கு.இராசாமணி உத்தரவின்படி, திருச்சி மாவட்டம், திருவெறும்பூர் வட்டம். காவிரி ஆற்று கரையோரக் கிராமங்களில் வசிக்கும் பொதுமக்களுக்கு விழிப்புணர்வை ஏற்படுத்தும் வகையில், “மணல் கடத்தல் தடுப்பு விழிப்பணர்வு பேரணி” திருச்சி வருவாய் கோட்டாட்சியர் அன்பழகன் தலைமையில், ‘நமது மண், நமது மானம், நமது உரிமை’ என்ற தலைப்பில், கிளியூர் கிராமத்தில் இருந்து தொடங்கி, பனையகுறிச்சி கிராமம் வரை இன்று நடைப்பெற்றது.

இதில் திருவெறும்பூர் வட்டாட்சியர் அண்ணாதுரை, திருவெறும்பூர் துணை காவல் கண்காணிப்பாளர் சேகர் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

இந்த விழிப்புணர்வு பேரணியில் வருவாய்துறை, காவல்துறை, கனிம வளத்துறை வட்டார மற்றும் வளர்ச்சி அலுவலர்கள், ஆற்றுப் பாதுகாப்பு கோட்ட உதவி செயற்பொறியாளர். தீயணைப்பு துறையினர், வட்டார மருத்துவ அலுவலர்கள், கல்வித்துறை மற்றும் பொதுமக்கள் கலந்துகொண்டனர்.

-ஆர்.சிராசுதீன்.

நீர் நிலை ஆக்கிரமிப்புகளை அகற்றி சுத்தம் செய்யும் இலங்கை கடற்படையினர்!
திருச்சி உருமு தனலெட்சுமி கல்லூரி மாணவர்கள் சாலை மறியல் போராட்டம்!

One Response

  1. kumar October 10, 2018 9:16 pm

Leave a Reply