ஏற்காடு மலைக்கிராமங்களில் கல்லூரி மாணவிகள் சேவை பணி நிறைவு விழா.

சேலம் மாவட்டம் ஏற்காட்டில், ஏகல் வித்யாலயா அமைப்பு மூலம் கல்லூரி மாணவிகள் சேவை பணிகளில் ஈடுப்பட்டனர். சென்னையை சேர்ந்த எம்.ஓ.பி.வைஸ்யா கல்லூரியில் ஜார்னலிசம் படிக்கும் 50 மாணவிகள் ஏற்காட்டில் உள்ள பட்டிப்பாடி, சோலூர், பெரியக்காடு, செங்கலுத்துப்பாடி உள்ளிட்ட கிராமங்களில் சமுதாய சேவை பணியில் கடந்த 5 நாட்களாக ஈடுப்பட்டு வந்தனர்.

ஏகல் வித்யாலயா அமைப்பை சேர்ந்த காமராஜ், கார்த்திகேயன், இலங்கேஸ்வரி ஆகியோரின் ஆலோசணையின்படி கல்லூரி மாணவிகள், அங்குள்ள பள்ளி மாணவர்களுக்கு பாடம் சொல்லி தருவது, மாணவர்கள் மற்றும் கிராம மக்களுக்கு தேசபக்தி, நல்லொழுக்கம், சுகாதாரம், பொதுநலன் உள்ளிட்டவைகள் குறித்து சொல்லிக் கொடுப்பது உள்ளிட்ட பணிகளை செய்துவந்தனர்.

இந்த 5 நாள் நிகழ்வின் நிறைவு விழா  ஏற்காடு டவுன் பகுதியில் உள்ள தனியார் தங்கும் விடுதியில் நடைப்பெற்றது. ஏகல் வித்யாலயா அமைப்பை சேர்ந்த செந்தில், ரமேஷ், மதியழகன் ஆகியோர் சிறப்பு விருந்தினர்களாக கலந்து கொண்டனர். கல்லூரி மாணவிகள் மலைக்கிராமங்களில் தங்களுக்கு கிடைத்த அனுபவங்கள் குறித்து விளக்கி கூறினர். சேவை பணிகளில் ஈடுபட்ட கல்லூரி மாணவிகளுக்கு நினைவு பரிசுகள் வழங்கப்பட்டது.

-நவீன் குமார்.

Leave a Reply