திருச்சி தேசிய கல்லூரி எதிரே வேகத்தடை இல்லாதக்காரணத்தால் அடிக்கடி  நிகழும் விபத்துக்கள்…!

திருச்சி-திண்டுக்கல் தேசிய நெடுஞ்சாலையில், திருச்சி மத்திய பேருந்து நிலையத்திலிருந்து சுமார் ஒரு கிலோ மீட்டர் தூரத்தில், பொன்னகர் அருகில் தேசிய கல்லூரி (National College) இருக்கிறது. இக்கல்லூரிக்கு எதிரில் வேகத்தடை இல்லாதக்காரணத்தால் அடிக்கடி  விபத்துக்கள் நடக்கிறது.

இதுக்குறித்து 18.02.2018 அன்று  நமது”உள்ளாட்சித் தகவல்”ஊடகத்தில் விரிவாக செய்தி வெளியிட்டு இருந்தோம்.

விரிவான செய்திக்கு இங்கே கிளிக் செய்யவும்

இந்நிலையில் இன்று மதியம் 2.35 மணியளவில் தேசிய கல்லூரியில் இருந்து சாலையை கடக்க முயன்ற ஒரு மாணவி மீதும், அதே நேரத்தில் இரு சக்கர வாகனத்தில் சாலையை கடக்க முயன்ற ஒரு இளைஞன் மீதும், திருச்சி நோக்கி வந்த  கார் ஒன்று மோதியதில் விபத்து ஏற்பட்டது. இதில் கல்லூரி மாணவிக்கும், இரு சக்கர வாகனத்தில் சாலையை கடக்க முயன்ற இளைஞனுக்கும் லேசான காயம் ஏற்பட்டது. அதிர்ஷ்டவசமாக இருவரும் உயிர் தப்பினர்.

வேகத்தடை இல்லாதக்காரணத்தால் தினந்தோறும் ஏதாவது அசம்பாவிதங்கள் நடைப்பெற்றுக் கொண்டேதான் இருக்கிறது. வேகத்தடை அமைக்க வேண்டிய தேசிய நெடுஞ்சாலைத் துறை  அதிகாரிகள், இதை வேடிக்கைப் பார்த்துக்கொண்டுதான் இருக்கிறார்கள்.

-ச.ராஜா.

Leave a Reply