குடிகாரர்களின் கூடாரமாக மாறிய பயணிகள் நிழற்குடை! -அருகில் இருக்கும் அரசு மதுப்பான கடை (டாஸ்மாக்) அகற்றப்படுமா?

திருவாரூர் மாவட்டம், குடவாசல் வட்டம், திருவிடச்சேரி ஊராட்சியில் குடவாசல் – நன்னிலம் மெயின் சாலையில் அரசு மதுப்பான கடை (டாஸ்மாக்) அமைந்துள்ளது.

அரசு மதுப்பான கடைக்கு வரும் மது நோயாளிகள் (குடிகாரர்கள்), மதுப்பான கடைக்கு எதிரே உள்ள பயணிகள் நிழற்குடையை ஆக்கிரமித்து மது அருந்தும் கூடாரமாக பயன்படுத்தி வருகின்றனர். இதனால்  பேருந்திற்காக காத்திருக்கும் பயணிகளும், அப்பகுதி பொதுமக்களும் மிகுந்த சிரமத்திற்கு உள்ளாகின்றனர்.  குறிப்பாக, பெண்கள்,  பள்ளி மற்றும் கல்லூரி செல்லும் பிள்ளைகள் அப்பகுதியில் நடமாடுவதற்கே   அஞ்சுகின்றனர். இதையெல்லாம் காவல்துறை கண்டுக்கொள்வதே இல்லை.

மேலும், திருவிடச்சேரி அரசு ஆரம்ப சுகாதார நிலையத்திற்கு வரும் நோயாளிகளும் இதனால் தர்மசங்கடத்திற்கு  உள்ளாகின்றனர்.

இந்த அரசு மதுப்பானக் கடையை (டாஸ்மாக்) அங்கிருந்து அகற்ற கோரி, அப்பகுதி பொதுமக்கள் மற்றும்  மகளிர் சுய உதவிக்குழுவினர் சார்பாக பலமுறை திருவாரூர்   மாவட்ட ஆட்சியரிடம் கோரிக்கை மனுக்கொடுத்தும்  இதுவரை எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை.

எனவே, தமிழக முதலமைச்சர் தான் இந்த பிரச்சனைக்கு முற்றுப்புள்ளி வைக்கவேண்டும்.

-க.மகேஸ்வரன்.

 

Leave a Reply