இலங்கை வட மத்திய கடற்படை வீரர்கள் மன்னார், ஒலுதுடுவாய் கடற்கரையில் மேற்கொண்ட ரோந்துப் பணியின் போது, சந்தேகத்திற்கிடமாக சாக்கு மூடைகளில் பல பொதிகளை கொண்டு சென்ற ஒருவரை சோதனை செய்தனர். அப்போது 999 கிலோ எடையுள்ள உலர்ந்த மஞ்சள் கொண்ட 20 பொதிகள் அவரிடம் இருப்பது தெரியவந்தது. இந்த மஞ்சள் பொதிகள் கடல் வழியாக இலங்கைக்கு கடத்தி வந்திருப்பது விசாரணையில் தெரியவந்தது.
இதுசம்மந்தமாக ஒருவர் கைது செய்யப்பட்டு தனிமைப்படுத்தலுக்காக சுகாதார மருத்துவ அதிகாரி மூலம் மன்னார் பொது சுகாதார ஆய்வாளரிடம் ஒப்படைத்தனர். பறிமுதல் செய்யப்பட்ட மஞ்சள் பொதிகள் சட்ட நடவடிக்கைகளுக்காக யாழ்ப்பாணம் சுங்க அலுவலகத்தில் ஒப்படைக்கப்பட்டது.
-என்.வசந்த ராகவன்.

Very bad….