04.11.2015 புதன்கிழமை ‘தினத்தந்தி’ நாளிதழில் “தீபாவளி பண்டிகையை முன்னிட்டு 12 ஆயிரம் சிறப்பு பஸ்கள் ஜெயலலிதா உத்தரவு” என்று அனைத்து பதிப்புகளிலும் தலைப்புச் செய்தியாக வெளியிட்டு இருந்தனர்.
ஜெயலலிதா என்பவர் யார்? நம் தமிழ்நாட்டின் முதலமைச்சர் அல்லவா. அப்படியானால், அந்த தலைப்பு எப்படி அமைந்திருக்க வேண்டும். “தமிழ்நாடு முதலமைச்சர் ஜெ.ஜெயலலிதா உத்தரவு அல்லது தமிழக முதல்வர் உத்தரவு” என்று வெளியிட்டு இருக்கலாம்.
ஆனால், கேவலம், ஒரு உள்ளாடை கம்பெனியின் விளம்பர வருவாய்க்காக, இப்படி நம் தமிழ்நாட்டின் முதலமைச்சரை அவமானப்படுத்துவது எந்த வகையில் நியாயம்? இது கவனக்குறைவாக நடைபெறவில்லை. முதல் பக்க விளம்பர வருவாய்க்காக, இடம் பற்றாக்குறையால் இந்த தவறு தொடர்ந்து நடைப்பெற்று வந்தது.
ஒரு செய்தியை வெளியிடுவதற்கும், வெளியிடாமல் இருப்பதற்கும், ஒரு ஊடக நிர்வாகத்திற்கு முழு உரிமை உண்டு. ஆனால், வெளியிடும் செய்திகளில் எந்த குற்றமும் ஏற்படாமல் பார்த்துக்கொள்வது ஆசிரியர் மற்றும் வெளியீட்டாளரின் கடமையல்லவா?
இதுக்குறித்து ‘தினத்தந்தி’ ஆசிரியர் இலாக்காவினரிடம் நேற்று தொலைபேசி மூலமாகவும், தமிழ்நாடு செய்தி மக்கள் தொடர்புதுறை அமைச்சர் K.T.ராஜேந்திர பாலாஜியிடம் அலைபேசி வழியாகவும், புகார் தெரிவித்து இருந்தோம்.
இது சம்மந்தமாக தமிழ்நாடு செய்தி மக்கள் தொடர்புதுறை மூலம் உரிய நடவடிக்கை எடுக்குமாறு, தமிழக அரசிடம் எழுத்துப்பூர்வமாக கேட்டுக்கொண்டோம். அவற்றின் விளைவாக தவறை உணர்ந்து ‘தினத்தந்தி’ நிர்வாகம் இன்று தன்னை திருத்திக்கொண்டது.
அன்பான வாசகர்களே! இது போன்ற தவறுகள் நாங்களே செய்தாலும், வேறு யார் செய்தாலும் தைரியமாகச் சுட்டிக்காட்டுங்கள்! ஆரோக்கியமான, நேர்மையான இதழியியல் பயணத்தைத் தொடர்வதற்கு நீங்களும் வழிக்காட்டுங்கள்…!
-டாக்டர்.துரைபெஞ்சமின்
ஆசிரியர் மற்றும் வெளியீட்டாளர்
