“கொரோனா நோய்” தடுப்பு நடவடிக்கைக் காரணமாக, கடந்த 3 மாதங்களுக்கும் மேலாக, நாடு முழுவதும் கோடிக்கணக்கான மக்கள் வீட்டில் முடங்கிக் கிடக்கின்றனர். இதனால் சுயத்தொழில் செய்யும் சிறு, குரு, நடுதரத் தொழில் முனைவோர்களும், வணிகர்களும் மற்றும் இதுபோன்ற நிறுவனங்களில் பணிபுரிந்த தற்காலிக ஊழியர்களும், வருமானம் எதுவுமுன்றி மிகுந்த பொருளாதாரா நெருக்கடிக்கு உள்ளாகியுள்ளனர்.
மேலும், கிராமப்புறத்தில் உள்ள ஏழை, எளிய மற்றும் விளிம்பு நிலையில் உள்ள மக்கள் அரசு வழங்கும் ரேஷன் அரிசியை மட்டுமே நம்பி உயிர் வாழ்ந்து வருகின்றனர். இந்நிலையில், நாடுமுழுவதும் பல்வேறு அமைப்புகள், அரசியல் கட்சிகள் மற்றும் தொண்டு நிறுவனங்கள்… ஏழை, எளிய மக்களின் துயர் துடைக்கும் பணியில் தொடர்ந்து பல்வேறு நிவாரண உதவிகளை வழங்கி வருகின்றனர்.
அந்த வகையில், திருச்சி மதுரம் மருத்துவமனை நிர்வாகத்தின் கீழ் செயல்பட்டு வரும் ”மதுரம் சுகாதார கல்வி மற்றும் சேவா அறக்கட்டளை” சார்பில், மதுரம் மருத்துவமனை நிர்வாக இயக்குநர் டாக்டர் ஐவன் கிறிஸ்டோபர் மற்றும் அவரது மனைவி டாக்டர் சர்மிளி பிரிசில்லா ஆகியோர் தலைமையில், திருச்சி, புதுக்கோட்டை மற்றும் கரூர் மாவட்டங்களில் உள்ள 18 கிராமங்களில் உள்ள 2000 ஏழை குடும்பங்களுக்கு தலா ரூ.1000 மதிப்புள்ள அரிசி மற்றும் மளிகை பொருட்களை நேரில் சென்று வழங்கியதோடு, அனைவருக்கும் முககவசங்களை இலவசமாக வழங்கி கொரோனா தடுப்பு விழிப்புணர்வு பணிகளையும் சிறப்பாக செய்துள்ளனர்.
-துரை திரவியம்.
ullatchithagaval@gmail.com
