தொழில்நுட்ப ரீதியிலான ஓய்வூதிய வழங்கல் முறை குறிப்பிடத்தக்க அளவில் மனிதவளத்தையும், நிதி வளத்தையும் சேமித்த அதே சூழலில், அதிக செயல்திறனையும் வெளிப்படுத்தியுள்ளது என்று மத்தியப் பணியாளர், பொதுமக்கள் குறைதீர்ப்பு, ஓய்வூதியத்துறை இணையமைச்சர் டாக்டர் ஜிதேந்திர சிங் கூறினார்.
புதுதில்லி விஞ்ஞான் பவனில் நடைபெற்ற 9-வது தேசிய அனுபவ விருதுகள் வழங்கும் நிகழ்ச்சி 2026 மற்றும் 60-வது ஓய்வுக்கு முந்தைய ஆலோசனைப் பயிலரங்கில் உரையாற்றிய அவர், மத்திய அரசின் ஓய்வூதிய சீர்திருத்தங்கள், ஓய்வூதியதாரர்களுக்கு எளிதான வாழ்க்கையை வழங்குவதோடு மட்டுமின்றி, நிர்வாக அமைப்பையும் திறன்மிக்கதாக மாற்றுவதை நோக்கமாகக் கொண்டுள்ளன என்று கூறினார்.
அமைப்பு ரீதியான இடைவெளிகளை கண்டறிவதற்கும், அரசின் நடைமுறைகளை மேம்படுத்துவதற்கும் ஓய்வுபெறும், ஓய்வுபெற்ற ஊழியர்களின் அனுபவங்கள் மதிப்புமிக்க கருத்துக்களை அளிப்பதாகக் கூறினார்.
இந்நிகழ்ச்சியின் ஒரு பகுதியாக 5 பேருக்கு தேசிய அனுபவ விருதுகளையும், நடுவர் குழு விருதுகளையும் வழங்கினார். அத்துடன் ஓய்வூதிய நண்பர்கள் கையேடு, அனுபவ விருது பெற்றவர்களுக்கான பாராட்டுப் புத்தகம், டிஜிட்டல் ஆய்வு சான்றிதழ் இயக்கம் 5-க்கான வழிகாட்டுதல்கள் ஆகியவற்றையும் அவர் வெளியிட்டார்.
திவாஹர்
